மாமனிதன் (திரைப்படம்)
மாமனிதன் (Maamanithan) என்பது இயக்குநர் சீனு இராமசாமி எழுத்து, இயக்கத்தில் 2022-இல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பாக இத்திரைப்படத்திற்குத் தயாரிப்பாளராக உள்ளார். விஜய் சேதுபதி, யுவன் சங்கர் ராஜா, சீனு ராமசாமி ஆகிய மூவருக்கும் தென்மேற்கு பருவகாற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை போன்ற படங்களுக்குப் பிறகு இணையும் நான்காவது படமாகும்.[3][4] மேலும், யுவன் தனது தந்தை இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்தார். நடிகை காயத்ரி ஒரு முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தார். கதைச்சுருக்கம்தனி ஒட்டுநரான இராதாகிருஷ்ணன் தன் மகளையும் மகனையும் தனியார் பள்ளியில் படிக்கவைப்பதற்காக தன் தொழிலில் இருந்து மாறி படுகுழியில் விழுகிறார். இதனால் ஏற்பட்ட சிக்கல்களால் தன் குடும்பத்தையும், ஊரையும் விட்டுத் தலைமறைவாகிறார். இச்சூழலில் தன் குடும்பத்தைக் காக்க என்ன செய்தார் என்பதை இப்படம் சித்தரிக்கிறது. நடிகர்கள்
தயாரிப்பு2018 திசம்பர் 15 அன்று ஓர் எளிய விழாவுடன் மதுரையில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.[6] படப்பிடிப்புக்கான இரண்டாவது கட்டமாக கேரளம் மற்றும் வாரணாசியில் நடைபெற்றது.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia