மாமிலாடன்

மாமிலாடன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத் தொகையில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 46 எண்ணுள்ள பாடல்.

மாமலாடன் என்றும் இவர் பெயர் சில பதிப்புகளில் உள்ளது. மலைய நாட்டு மன்னனை மலாடர் கோமான் என்று சங்கப்பாடல் குறிப்பிடுகிறது. இதனை எண்ணும்போது இந்தப் புலவர் மலைய நாட்டவர் எனத் தெருயவரும்.

பாடல் தரும் செய்தி

  • ஆம்பல் பூ சாம்பல் நிறம் கொண்டது.

ஆம்பல் பூவைப்போல் நிறம் கொண்ட ஊர்க்குருவி வீட்டுக் கூரையில் கூடு கட்டிக்கொண்டு வாழும். வீட்டு முற்றத்தில் காயவைத்திருக்கும் பொருள்களைத் தின்றுவிட்டு மரத்தடியில் எருவாகிக்கொண்டிருக்கும் பூ, விதை போன்றவற்றையும் பொறுக்கி உண்ணும். அவர் பொருள் தேடச் சென்ற நாட்டில் அந்தக் குருவி இல்லை போலும். (இருந்திருந்தால் அதனைப் பார்த்தவுடன் என் நினைவு வருமல்லவா? - இப்படி தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

பாடல்

ஆம்பற் பூவின் சாம்பலன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத்
தெருவினுண் டாது குடைவன வாடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya