மாம்பழச்சிட்டு அல்லது மஞ்சள் சிட்டு (Common Iora - Aegithina tiphia) என்பது வெப்பமண்டல இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தெற்காசியா முழுவதும் காணப்படும் (மரங்களில்) அடையும் (passerine) பறவைகளுள் ஒன்றாகும். இப்பறவைகளின் இறகுகளில் மாறுபாடுகள் உள்ளன, அவற்றில் சில துணையினங்களாக குறிப்பிடப்படுகின்றன.
வகைப்பாடு
மஞ்சள் சிட்டில் பதினொரு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]
A. t. humeiBaker, ECS, 1922 – மத்திய தீபகற்ப இந்தியா
A. t. tiphia (Linnaeus, 1758) – வட இந்தியா முதல் மேற்கு மியான்மர் வரை
A. t. septentrionalisKoelz, 1939 – வடமேற்கு இமயமலை
A. t. philipiOustalet, 1886 – தெற்கு-மத்திய சீனா, கிழக்கு மியான்மர், வடக்கு தாய்லாந்து மற்றும் வடக்கு, மத்திய இந்தோசீனா
A. t. cambodiana Hall, BP, 1957 – தென்கிழக்கு தாய்லாந்து, கம்போடியா மற்றும் தெற்கு வியட்நாம்
A. t. horizopteraOberholser, 1912 – தென்கிழக்கு மியான்மர் மற்றும் தென்மேற்கு தாய்லாந்து, மலாய் தீபகற்பம், சுமத்ரா மற்றும் அருகிலுள்ள தீவுகள்
A. t. scapularis (Horsfield, 1821) – சாவகம் மற்றும் பாலி
A. t. viridis (Bonaparte, 1850) – மத்திய, தெற்கு போர்னியோ
A. t. aequanimisBangs, 1922 – வடக்கு போர்னியோ மற்றும் மேற்கு பிலிப்பைன்ஸ்
அளவும் இயல்புகளும்
மாம்பழச்சிட்டின் கூப்பாடுⓘ
இது ஊர்க்குருவியிலும் சற்று சிறிதாய்க் கீழ்ப்பக்கம் பசுமஞ்சளாய் இருக்கும் ( 14 செமீ [[3]] ). ஆண், பெண் இரண்டுமே இனப்பெருக்கமல்லா காலத்தில் பசுமை கலந்த மஞ்சள் நிறவுடலும் இறக்கைகளில் வெண்பட்டைகளும் கொண்டிருக்கும்; ஆனால் பெண் சிட்டின் மேல்பாகம் பசுமையாக இருக்கும், ஆணின் இறக்கைப்பகுதி கருமை அதிகமாயிருக்கும்; இனப்பெருக்க காலத்தில் ஆணின் முதுகும் தலையும் வாலும் கருத்திருக்கும்; மஞ்சள் நிறம் தூக்கலாகத் தெரியும். குளிர்காலத்தில் ஆண் சிட்டு தன் கருமையை இழந்து பேடையைப் போல் பசுமை போர்த்திருக்கும்.[4] மர நெருக்கமுள்ள இடங்கள், தோட்டங்கள், சிறு காடுகளில் இவை இணையுடன் வாழும்.