மாய்லி சாஞ்சேழ்
மாய்லி சாஞ்சேழ் (Mayly Sánchez) அயோவா அரசு பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யும் ஒரு வெனிசுவேலா நாட்டுத் துகள் இயற்பியலாளர் ஆவார். இவர் 2011 இல் அறிவியலாளர், பொறியாளர் தொடக்கநிலை ஆய்வுக்கான குடியரசு தலைவர் விருதைப் பெற்றுள்ளார். இது தொடக்கநிலை அறிவியல் ஆய்வாளருக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் உயர்நிலைத் தகைமையாகும், இவர் 2013 இல் பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனத்தால் இலத்தீன அமெரிக்காவின் பத்து உயர்நிலை அறிவியலாளரில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார். வாழ்க்கைமாய்லி சாஞ்சேழ் வெனிசுவேலா கரகாசில் பிறந்தார். இவர் தன் குடும்பத்தோடு தன் 13 ஆம் அகவையில் வெனிசுவேலா, மேரிதவுக்கு இடம் பெயர்ந்தார். இவர் பாதிமா கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவர் வெனிசுவேலா, மேரிதாவில் உள்ள அந்தேசு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இவர் இயற்பியல் இளவல் பட்டத்தை 1995 இல் பெற்றார், இவர் தன் பட்டமேற்படிப்புக்கான உதவிநல்கையை[1] இத்தாலி, திரியெசுத்தேவில் உள்ள பன்னாட்டுக் கோட்பாட்டு இயற்பியல் மையத்தில் படிக்க வென்றார். இவர் உயர் ஆற்றல் இயற்பியலில்1996 இல் பட்டயம் பெற்றதும், மசாசூசட், போசுட்டனுக்குப் புறத்தே அமைந்த டப்ட்சு பலகலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு நிகழ்ச்சியில் சேர்ந்து.[2] முனைவர் பட்ட்த்தை 2003 இல் பெற்றார்.[3] முனைவர் பட்டம் பெற்றதும், சாஞ்சேழ்ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் ஆய்வை மேற்கொண்டார். இவர் 2007 இல் அமெரிக்க ஆற்றல் துறையின் ஆர்கோன் தேசிய ஆய்வகத்தில் உதவி இயற்பியலாளராகப் பணியில் அமர்த்தப்பட்டார். இவர் 2009 இல் அயோவா அரசு பல்கலைக்கழகத்தில் புல உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் அங்கு இப்போது இயற்பியல், வானியலுக்கான இணைப்பேராசிரியராகவும் கேசுலிங் குடும்பப் பேராசிரியராகவும் உள்ளார் .[4] இவரது ஆய்வு நீள அடித்தள நொதுமன் செய்முறை (DUNE) திட்டத்தின் பகுதியாக அமைந்ததாகும். இச்செய்முறையில் நொதுமன்களின் செறிந்த கற்றையை இல்லினாயிசில் அமைந்த பெர்மி தேசியச் சுழன்முடுக்கி ஆய்வகத்தில் இருந்து தென்தக்கோட்டாவில் உள்ள ஓம்சுட்டேக் சுரங்கத்தின் காணிக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.[5] இந்தச் செய்முறை புடவி எப்படி உருவானது என்பதையும் பாறைவழி கடக்கும்போது நொதுமன்கள் ஏன் வடிவ மாற்றத்தை அடைகின்றன என்பதையும் அறிவியலாளர் உணரவைக்க வடிவமைக்கப்பட்டது.[6] இவர் மினோசு (MINOS) எனச் சுருக்கி அழைக்கப்படும் முதன்மை உட்புகும் நொதுமன் அலைவாட்டத் தேட்டத் திட்டத்திலும் நோவா (NOνA) எனச் சுருக்கி அழைக்கப்படும் வடக்கு மின்னசோட்டாவில் உள்ள பெர்மி ஆய்வக காணிகளில் இருந்து அனுப்பப்படும் நொதுமன் அலைவுகளை ஆயும் செய்முறைகளிலும் ஈடுபட்டுள்ளார்[5] இவர் பெர்மி ஆய்வகத்தின் சுழன்முடுக்கி நொதுமன்-நொதுமி ஊடாட்டச் செய்முறையின் வல்லுனரும் பரப்புரையாளரும் ஆவார். அமெரிக்க வெள்ளை மாளிகை 2012 இல் இவரை[7] 2011 ஆம் ஆண்டு பெக்கேசு (PECASE) விருது வென்றவராக அறிவித்தது. இந்த விருது இளம் அறிவியலாளருக்கு அமெரிக்காவில் அறிவிக்கப்படும் மிக உயரிய விருதாகும்.[8] பிரித்தானிய ஒலிபரப்புக் கழகம் 2013 இல் இவரை இலத்தீன அமெரிக்க பெண் அறிவியலாளரில் முதல் பத்து அரிய பெண் அறிவியலாளர்களில் ஒருவராகச் சுட்டியது.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia