மார்கரெட் ஆர்வுட்
மார்கரெட் ஆர்வுட் (Margaret Harwood, மார்ச்சு 19, 1885 – பிப்ரவரி 6, 1979)[1] ஓர் அமெரிக்க வானியலாளரும் நாண்டக்கெட்டில் அமைந்த மரியா மிட்செல் வான்காணக முதல் இயக்குநரும் ஆவார். இவர் வானியல்சார் ஒளிப்படவியலில் வல்லுனர் ஆவார். இளமையும் கல்வியும்இவர் 1885 இல் மசாசூசட் சேர்ந்த இலிட்டில்டனில் பிறந்தார். இவர் எர்பெர்ட் ஜோசப் ஆர்வுட்டின் மகளாவார். இவரது தாயார் எமேலீ அகத்தா கிரீன் ஆவார். இவர் இவ்விருவரின் ஒன்பது குழந்தைகளில் ஒருவராவார். இவர் இராடுகிளிப் கல்லூரியில் சேர்ந்து 1907 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். அப்போது இவர் பை, பீட்டா, கப்பா கழகத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் 1916 இல் கலிபோர்னியா பல்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். வாழ்க்கைப்பணிஇவர் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஆர்வார்டு வான்காணகத்தில் பணிபுரிந்துள்ளார். இவர் போசுட்டன், கேம்பிரிட்ஜ், தேதாம் ஆகிய இடங்களி அமைந்த தனியார் பள்ளிகளிலும் கல்விகற்பித்துள்ளார். இவர் 1912 இல் நாந்துகெட் மரியா மிட்செல் வான்காணகத்தின் வானியல் ஆய்வுநல்கையைப் பெற்றார். இந்த வான்காணகம் முதல் பெண் வானியலாளர் நினைவாக அமெரிக்கா கட்டிய சிறிய வான்காணகம் ஆகும். இவர் 1916 இல் இந்த வான்காணக இயக்குநராகி அங்கே தான் 1957 இல் ஓய்வு பெறும் வரை பணிபுரிந்தார்.இவரது புலம் சிறுக்கோள்கள், விண்மீன்களின் ஒளிமாற்றத்தை அளக்கும் ஒளியளவியல் ஆகும். குறிப்பாக இவர் சிரிய கோளகிய ஈரசின் ஒளிமாற்றத்தை அளந்தார். இவர் அமெரிக்க வானியல் கழக உறுப்பினரும் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆக இருந்து பல சம கால வானியலாளர்களோடு கடிதத் தொடர்பு வைத்திருந்தார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல இடங்களுக்குப் பயணம் செய்துள்ளார். இவர் சீரியச் சமூகப் பணியாளர் ஆவார். எனவே, இவர் தன்னார்வத்தோடு நாந்துகெட் கல்லூரி மருத்துவமனையிலும், நாந்துகெட் பள்ளிக் குழுவிலும் நாந்ந்துகெட் செஞ்சிலுவைச் சங்கத்திலும் பணி செய்துள்ள்ளார். இவர் இரண்டாம் உலகப் போரின்போது மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்விகற்பித்துள்ளார். மேலும் இவர் நாந்துகெட் மருத்துவமனை அறக்கட்டளையாளராகவும் இருந்துள்ளார். ![]() சாதனைகள்இவரது கண்டுபிடிப்பாகிய சிறுகோள் 886 வாழ்சிங்டோனியா ஒப்புதல் கிடைப்பதற்கு நன்கு நாட்களுக்கு முன்னமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அக்காலதில் ஆர்வார்டின் புரவலர்கள் இத்தகைய கண்டுபிடிப்புகளுக்காகப் பெண்கள் பெயர்பெறுதல் தகுதியானதன்று எனக் கருதியுள்ளனர்.[2] இவர் அப்போது உலகின் பெரிய வான்காணகமாக விளங்கிய மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் சேர்ந்த முதல் பெண்மணியாவார்.[3] கார்னெலிசு யோகான்னெசு வான் கவுட்டனும் இங்கிரிடு வான் கவுட்டன் குரோயெனவெல்டும் தாம் கெகிரெல்சும் ஆகிய அறிவியலாளர் மூவர் கூட்டாகத் தாம் 1960 இல் கண்டுபிடித்த 2542 P-L ஆர்வுட் எனும் சிறுகோளை 7040 ஆர்வுட் என இவரது நினைவாகப் பெயரிட்டனர்.[4] இறப்புஇவர் இலிட்டில்டனில் உள்ள வெசுட்டுலான் கல்லறையில் அடக்கம் செய்யபட்டார்..[2] தகைமைகள்ஆர்வுட் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தகைமை முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாவார். கார்னெலிசு யோகான்னெசு வான் கவுட்டனும் இங்கிரிடு வான் கவுட்டன் குரோயெனவெல்டும் 1960 இல் கண்டுபிடித்த 2542 P-L ஆர்வுட் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[4] இவர் 1962 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார்.[5] மேலும் நாந்துகெட்டில் உள்ல மரியா மிட்செல் கழகத்தின் மகளிருக்கான வானியல் ஆய்வுநல்கை வென்றார். மேலும் தகவல்களுக்குக் காண்க, http://www.wickedlocal.com/article/20120410/News/304109549#sthash.qmlxqiDy.dpuf மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia