மார்ச் 0மார்ச் 0 என்பது சாதாரண ஆண்டுகளில் பிப்ரவரி 28ஐயும் லீப் ஆண்டுகளில் பிப்ரவரி 29ஐயும் குறிக்க பயன்படுத்தப்படும் ஓர் புனை நாளாகும். கொடுக்கப்பட்ட நாளின் வாரத்தின் கிழமைகளை கண்டிட ஜான் ஆர்டன் கான்வே என்பவர் கண்டுபிடித்த இறுதிநாள் நெறிமுறை (டூம்ஸ்டே கொள்கை)யின்படி கணக்கிடும் முறையில்[1] இவ்வாறு பாவிக்கப்படுகிறது. இந்நெறிமுறை கிரெகொரியின் நாட்காட்டி 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழல்வதை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. எந்தவொரு ஆண்டின் நாட்காட்டியிலும் 4/4, 6/6, 8/8, 10/10, 12/12, மற்றும் பிப்ரவரியின் இறுதிநாள் (மார்ச் 0) எப்போதும் ஒரே கிழமையில் (இதுவே இறுதிநாள் என இந்நெறிமுறையில் குறிக்கப்படுகிறது) வருவதையும் இச்சோடிகள் 5/9 & 9/5 7/11 & 11/7 இந்தக்கிழமையில் அமைவதையும் கொண்டு ஏற்படுத்தப்பட்ட நினைவுமொழி கொண்டு மனதாலேயே நாளின் கிழமையை கண்டுபிடிக்க முடியும். இந்த நெறிமுறைப்படி ஓர் நாளின் கிழமையைக்காண மூன்று படிகள் உள்ளன.
இதனை அமைத்த கான்வே வாரநாட்களை ஏழின் அடிப்படையில் அமைந்த எண்களமைப்பில் எண்ணலானார். இதன்படி சூன்யநாள், முதல்நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள்....ஆறாம் நாள் (Noneday, Oneday, Twosday, Treblesday, Foursday, Fiveday, and Six-a-day). மேற்கோள்கள்
மேலும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia