கணிதத்தில் மாறிலி (constant) என்பது, எடுத்துக்கொள்ளப்பட்ட சூழல் முழுவதும், தன் மதிப்பில் எந்தவொரு மாற்றமும் கொள்ளாத ஒரு கணியமாகும். இது கணிதக் கணியம் மாறிக்கு எதிர் நிலையில் உள்ளது. பொதுவாக மாறிலிகளைக் குறிப்பதற்கு ஆங்கில அகரவரிசையின் தொடக்க எழுத்துக்களான a, b, c .., ஆகியவையும், மாறிகளைக் குறிப்பதற்கு இறுதி எழுத்துக்களான x, y, z ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,
இருபடிக்கோவையின் பொதுவடிவம்:
இவ்வடிவில், a, b மற்றும் c மாறிகளாகவும் x மாறியும் ஆக உள்ளன. இதனை இருபடிச் சார்பு இன் சார்பலனாக எடுத்துக் கொண்டால் x இன் மாறி நிலையையும், a, b , c -இவற்றின் மாறிலி நிலையையும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். இருபடிக்கோவையில் a, b , c ஆகிய மூன்றும் கெழுக்கள் அல்லது குணகங்கள் என அழைக்கப்படுகிறன. இதில் மாறி x ஆனது, உடன் இல்லாமையால் cமாறிலி உறுப்பு என அழைக்கப்படுகிறது. c ஐ x0 உறுப்பின் கெழுவாகவும் கொள்ளலாம். எனவே எந்தவொரு பல்லுறுப்புக்கோவையிலும், மாறியின் அடுக்கு பூச்சியமாக உள்ள உறுப்பு மாறிலியாகும்.[1]:18
மாறிலிச் சார்பின் வரையறையில் மாறிலி பயன்படுகிறது. மாறிலிச் சார்பின் வீச்சு ஓருறுப்புக் கணமாகும். அதாவது அனைத்து உள்ளீடுகளின் சார்பலன்களும் சமமாக ஒரே வெளியீட்டைக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக,
இச்சார்பின் ஆட்களத்தின் எல்லா உறுப்புகளின் சார்பலனும் ஒரே எண் 5 ஆக இருக்கும்.
சூழல் சார்ந்த மாறிலி
சில சமயங்களில் மாறிலியின் மாறாமல் இருக்கும் நிலை அது அமையும் சூழலைப் பொறுத்து அமையும்.
எடுத்துக்காட்டு:
இங்கு x மாறிலி என்பதால் (அதாவது x இன் மதிப்பு h ஐச் சார்ந்து இல்லை) எல்லையை விட்டு வெளிக்கொணரப்படுகிறது.
(இங்குள்ள எல்லையின் மதிப்பு x ஐப் பொறுத்து இல்லை என்பதால் அம்மதிப்பு மாறிலியாகக் கருதப்படுகிறது)
φ (பொன் விகிதம்), இதன் மதிப்பு: அல்லது தோராயமாக 1.618033988749894848204586
நுண்கணிதத்தில்
ஒரு சார்பு அல்லது கணியத்தின் மாறுவீதத்தின் எல்லை மதிப்பாக அதன் வகைக்கெழு வரையறுக்கப்படுகிறது. எனவே, மாறாத்தன்மை கொண்ட மாறிலியின் வகைக்கெழு பூச்சியம் ஆகும்.