மாற்றவியலா நினைவகம்![]() மாற்றவியலா நினைவகம் (Read-only memory அல்லது ரோம் , ROM) என்பது கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை தரவுச் சேமிப்பு வன்பொருளாகும். பொதுவாக இது ஓர் கணினிச் சில்லில் அமைக்கப்பட்டிருக்கும். நேரடி அணுகல் நினைவகம் போலன்றி இதில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் மின்னாற்றல் இல்லாதநிலையிலும் மறைவதில்லை. எனவே இவை மாயமாகா நினைவகம் (Non Voltile Memory) எனவும் குறிப்பிடப்படுகிறது. இதில் எழுதப்பட்டுள்ள தரவுகளை கணினியின் வழமையான செயல்பாட்டின்போது மாற்றவோ அழிக்கவோ இயலாது. இந்தத் தன்மையால் கணினிகளின் பயோசு எனப்படும் அடிப்படை உள்ளீடு/வெளியீடு அமைப்புகளில் மாற்றவியலா நினைவகம் பயன்படுத்தப்படுகிறது. சில பயனாளர் இலத்திரனியல் கருவிகளில் நிலை மென்பொருளுக்கான நினைவகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் உள்ள தரவுகளை மாற்றுகின்ற தன்மையைப் பொறுத்து இவை வகைப்படுத்தப்படுகின்றன:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia