மாலிப் பேரரசு
வரலாற்றில் மாண்டென் குருஃபாபா எனவும் அறியப்படும் மாலிப் பேரரசு 1230 - 1600 காலப்பகுதியில் மேற்கு ஆப்பிரிக்காவில் நிலவிய மாலின்கே/பம்பாரா/மாண்டின்கா/தியுலாப் பேரரசு ஆகும். சூன்யாத்தா கெயித்தா என்பவரால் நிறுவப்பட்ட இப்பேரரசு, இதன் ஆட்சியாளர்களின், குறிப்பாக மான்சா மூசாவின் செல்வத்துக்காகப் பெரிதும் அறியப்பட்டது. மாலிப் பேரரசே மேற்கு ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பேரரசு. பேரரசுக்கு அருகின் இருந்த பகுதிகளிலும், இதன் சிற்றரசுகள், மாகாணங்கள் என்பவற்றைக் கொண்டிருந்த பிற பகுதிகளிலும் தமது மொழி, சட்டங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பரவச் செய்ததன் மூலம் அப்பகுதிகளின் பண்பாட்டில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. சகாராவில் உள்ள பாறை ஓவியங்கள், சகாரா வளமாகவும் காட்டு விலங்குகள் நிறைந்தும் விளங்கிய கிமு 10,000 காலப்பகுதியிலேயே வடக்கு மாலியில் குடியேற்றங்கள் இருந்ததைக் காட்டுகிறது. கிமு 300 ஆண்டுக் காலப்பகுதியில், பெரிய ஒழுங்கு முறைப்பட்ட குடியேற்றங்கள், குறிப்பாக ஆப்பிரிக்காவின் மிகப்பழைய நகரமான ஜென்னேக்கு அருகில் உருவாகின. கிபி 6ம் நூற்றாண்டளவில், பொன், உப்பு, அடிமைகள் ஆகியவற்றின் இலாபம் தருகின்ற சகாரா ஊடான வணிகம் தொடங்கியது. இது மேற்கு ஆப்பிரிக்காவின் பேரரசுகள் தோன்ற வழிவகுத்தது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia