மால்டா மாவட்டம்
மால்டா மாவட்டம் (Maldah district) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டமானது மாநிலத் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 347 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் மால்டா நகரம் ஆகும். மால்டா ஒரு காலத்தில் வங்காளத்தின் தலைநகராக இருந்தது. இம்மாவட்டத்தில் மல்பரிச் செடிகளும், மாமரங்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. இதை வடக்கு வங்காளத்தின் நுழைவாயில் (gateway) என அழைப்பர். எல்லைகள்இம்மாவட்டத்தின் எல்லைகளாக முர்சிதாபாத் மாவட்டம், வடக்கு தினஜ்பூர் மாவட்டம், தெற்குத் தினஞ்பூர் மாவட்டம், பீகார் மாநிலத்தின் புருலியா மாவட்டம், ஜார்கண்ட் மாநிலத்தின் சாந்தி பர்கானாஸ் மாவட்டம் மற்றும் வங்காளதேசமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. மக்கட்தொகை2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 39,97,970 ஆகும்.[1] மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1,071 பேர் எனும் வீதத்தில் உள்ளது. மக்கட்தொகைப் பெருக்க விகிதம் 21.5% ஆகும். மேலும் ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 939 பெண்கள் எனும் அளவில் உள்ளது. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 62.71% ஆகும். பொருளாதாரம்மாம்பழம், சணல், பட்டு போன்றவை இம்மாவட்டத்தின் முக்கிய உற்பத்திப் பொருட்களாகும். இங்கு உற்பத்தியாகும் மாம்பழம் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விழாக்கள்இம்மாவட்டத்தில்,
போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia