மாவட்டக் காவல்துறை அமைப்புமாவட்டக் காவல்துறை அமைப்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குற்றங்களைத் தடுப்பதற்கும், மக்களிடம் சட்டம் மற்றும் ஒழுங்குகளைக் காக்கவும் காவல்துறைக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவர் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு கீழ்காணும் அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த அமைப்பில் கீழ்காணும் காவல்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்இந்தியக் காவல் பணி (I.P.S-Indian Police Service)அதிகாரி ஒருவரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக தமிழ்நாடு அரசு நியமிக்கிறது. இவர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துக் குற்றங்களையும் தடுக்கும் விதமாக தனக்குக் கீழுள்ள அதிகாரிகளைக் கொண்டு செயல்படுகிறார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட நீதித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில உயர் அதிகாரிகள் வழிகாட்டுதலின் பேரில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் உதவியுடன் காவல்துறையில் இருப்பவர்கள அனைவரது சம்பளம், பணிமாற்றம் போன்ற அலுவலகப் பணிகளையும் கண்காணிக்கிறார். மாவட்டக் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர்இந்தியக் காவல் பணி (I.P.S-Indian Police Service)அதிகாரி அல்லது காவல்துறைப் பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளை மாவட்டத்தின் தேவைகளுக்கேற்ப சட்டம் -ஒழுங்கு, குற்றம், மதுவிலக்கு அமல், ஆயுதப்படை போன்ற பிரிவுகளின் கீழ் மாவட்டக் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர்களை தமிழ்நாடு அரசு நியமிக்கிறது. இவர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அறிவுறைகளின்படி அந்தப் பிரிவின் கீழான குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றனர். துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர்காவல்துறைப் பணியில் துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் மாவட்டத்தின் தேவைகளுக்கேற்ப சட்டம் -ஒழுங்கு, குற்றம், மதுவிலக்கு அமல், ஆயுதப்படை, பொருளாதாரக் குற்றப்பிரிவு போன்ற பிரிவுகளின் கீழ் துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களை தமிழ்நாடு அரசு நியமிக்கிறது. இவர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அறிவுறையின்படி அந்தப் பிரிவின் கீழான குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதுடன் தங்களுக்குக் கீழான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களைக் கொண்டு கட்டுப்படுத்துகின்றனர். காவல்துறை வட்ட ஆய்வாளர்
சார்பு ஆய்வாளர்கள்
|
Portal di Ensiklopedia Dunia