மா. பாலசிங்கம்மா. பா. சி. என அறியப்படும் மா. பாலசிங்கம் (நவம்பர் 26, 1939 – அக்டோபர் 31, 2020) ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ஆவார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எனப் படைப்புகளை எழுதியுள்ளார். முற்போக்குச் சிந்தனையாளர்.[1][2] வாழ்க்கைக் குறிப்புமா. பாலசிங்கம் யாழ்ப்பாணம், கொட்டடி என்ற ஊரில் ஐயம்பிள்ளை-செல்லம்மா ஆகியோருக்குப் பிறந்தார். யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார். கொழும்பில் எழுத்தராக நீண்ட காலமாகப் பணியாற்றி வந்தார். தினகரன் வாரமஞ்சரியில் இவரது முதல் சிறுகதை 'ஏமாற்றம்' என்ற பெயரில் வெளிவந்தது. இவர் எழுதிய கட்டுரைத் தொகுப்புகள் நூலாக்கப்பட்டு "மா. பா. சி. கேட்டவை என்ற பெயரில் 2016-இல் வெளியிடப்பட்டது. படைப்புகள்
மறைவுமா.பாலசிங்கம் சில மாதங்களாக சுகவீனமடைந்த நிலையில், 2020 அக்டோபர் 31 அன்று கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தனது 81-வது அகவையில் காலமானார்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia