மிக்கோ உசுயி
மிக்காவோ உசுயி (Mikao Usui, ஆகத்து 15, 1865 - மார்ச் 9, 1926) ரெய்கி எனப்படும் ஆன்மீகப் பயிற்சியை நிறுவியவர். உடல், உணர்ச்சி மற்றும் மன நோய்களுக்கு ரெய்கி சிகிச்சை பயன்படுகிறது. அவரது நினைவகத்தில் உள்ள கல்வெட்டில் உள்ள கூற்றுப்படி, உசுயி தனது வாழ்நாளில் 2000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு ரெய்கியை போதித்தார். இவா்களில் பதினாறு பேர் ஷின்ஸ்பிடென் நிலையை அடையும்வரை தங்கள் பயிற்சியை தொடர்ந்தனர். ஷின்ஸ்பிடென் நிலை என்றால் மேற்கத்திய மூன்றாம் நிலை அல்லது மாஸ்டர நிலைக்குச் சமமானதாகும். உசுயி 1926-ம் ஆண்டு மார்ச் 9-ம் நாள் பக்கவாத நாேயால் மறைந்தாா். உசுயி 1865-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் ஜப்பானின் கிஃபூ ப்ரிஃபெக்சரின், யமகாடா மாவட்டத்தில் உள்ள தானியாயி (இப்போது மியாமா சோ என அழைக்கப்படுகிறது) என்ற இடத்தில் பிறந்தார். இது தற்போது நகோயாவுக்கு அருகில் உள்ளது. மிக்கோ உசுயி சிகாகோ பல்கலைக் கழகத்தில் இறையியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார் என்றும், அவர் பல்கலைக்கழகத்தில் எந்தப் பட்டமும் பெற்றதில்லை, ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்காெண்டாா் எனவும் வேறுவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. உசுயி சதூ சுசூகி என்பவரைத் திருமணம் செய்தார், அவர் புஜியின் மற்றும் டோஷிகோ என்னும் குழந்தைகளை பெற்றார். அவருடைய தொடர்ச்சியான ஆய்வின் ஒரு பகுதியாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா உட்பட பல மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்ததாக நம்பப்படுகிறது. வரலாறு, மருத்துவம், புத்தமதம், கிறித்துவம், உளவியல் மற்றும் தாவோயிசம் ஆகியவை அவருடைய ஆய்வுகளில் அடங்கும்.[1][2][3][4][5] மேற்காேள்கள்
|
Portal di Ensiklopedia Dunia