இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
Bicycle - மிதிவண்டி, ஈருளி
Tube - மென் சக்கரம், தூம்பு
Tyre - வன் சக்கரம், உருளிப்பட்டை, மெத்துருளி
Front wheel - முன் சக்கரம், முன்னாழி
Rear wheel (or) Back wheel - பின் சக்கரம், பின்னாழி
Free wheel - வழங்கு சக்கரம்
Sprocket - இயக்குச் சக்கரம்
Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
Training wheels - பயிற்சிச் சக்கரங்கள், பயிலாழி
Hub - குடம், ஆழிக்குடம், நடு
Front wheel axle - முன் அச்சுக் குடம், முன்னாழி அச்சு
Rear wheel axle - பின் அச்சுக் குடம், பின்னாழி அச்சு
Rim - சக்கரச் சட்டகம், ஆழி வளை
Gear - பல்சக்கரம், பல்லாழி
Teeth - பல்
Wheel bearing - சக்கர உராய்வி
Ball bearing - பந்து உராய்வி, உண்டைத் தாங்கி (தாங்கி = bearing)
Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
Cone cup - கூம்புக் கிண்ணம்
Mouth valve - மடிப்பு வாய், ஒருபோக்கி வாய்
Mouth valve cover - மடிப்பு வாய் மூடி, ஒருபோக்கி வாய்மூடி
Chain - சங்கிலி
Chain link - சங்கிலி இணைப்பி
Chain pin - இணைப்பி ஒட்டி
Adjustable link - நெகிழ்வு இணைப்பி
Circlip - வட்டக் கவ்வி
Chain lever - சங்கிலி நெம்பி
Frame - சட்டகம்
Handle bar - பிடி செலுத்தி, கைத்திருப்பி, கைச்செலுத்தி
Gripper - பிடியுறை
Cross Bar - குறுக்குத் தண்டு
Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை
Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு
Dynamo - மின் ஆக்கி
Head light - முகப்பு விளக்கு, முன்விளக்கு
Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி, பின் ஒளிர்வி
Rearview Mirror - பின்காட்டி, பின் ஆடி
Back Carrier - பொதி பிடிப்பி, பின் சுமைதி
Front Carrier Basket - பொதி ஏந்தி, முன் கூடை
Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள், சுமைதி கால்
Side box - பக்கவாட்டுப் பெட்டி, பக்கப் பெட்டி
Stand - நிலை, நிற்பி
Side stand - சாய்நிலை, சாய் நிற்பி
Speedo meter (Odo meter) - வேகம்காட்டி, விரைவளவி, விரைவுமானி
Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)
Wooden mallet - மரச் சுத்தி
Grease - உயவுப் பசை
Lubricant oil - உயவு எண்ணெய்
Waste oil - கழிவு எண்ணெய்
seat, saddle = குந்துகை, இருக்கை
handle bar = கைப்பிடிப் பாளை (தென்னம் பாளை என்பதில் வரும் பாளை என்பது bar என்பதையே குறிக்கிறது.)
wheel = வளை/வளவி (கையில் போடுவதும் வளவி தான்.)
mud guard = மட் காப்பு (மண்+காப்பு)
stand = தண்டை (தண்டு கொள்ளுதல் என்பது இருத்தலும் நிலைத்தலும் ஆகும்.)
carrier = தூக்கி
pedal = மிதி
spoke = போழ்க்கு (போழுதல் என்பது கூர்மையாகக் குத்துதல். போழ்க்குகள் இங்கே சக்கர விளிம்பில் இருந்து நடுவத்தை நோக்கிப் போவது போழ்க்குவதாய் இருக்கிறது.)
wheel rod = வளை/வளவி உரல் (எல்லாவற்றிற்கும் தண்டு எனவே சொல்லிக் கொண்டிராமல் உரல் என்ற சொல் இங்கே பயனாகிறது. கம்பு, தண்டு, தடி, உரல் எனப் பலவற்றையும் வேறுபாடு விளங்கிப் பயன்படுத்த வேண்டும்.)
bell = மணி
rim = விளிம்பு
tube = தூம்பு
tyre = தோலி (வியப்பாக இருக்கும்; தோலில் இருந்த கிளைத்த தோலி என்பது பழத்திற்கு மட்டுமல்லாமல் எல்லாவிதமான மேல் உறைகளுக்கும் பயன்படக் கூடிய சொல் தான்)
dynamo = துனைமி ("கதழ்வும் துனைவும் விரைவுப் பொருள" என்பது தொல்காப்பியம். இந்தச் சொல் ப.அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியில் இருக்கிறது. அருமையான சொல்.)
reflector = மறுபளிப்பி
caliper = இடுக்கி
shoe = கவை
cable = கொப்புழை (மரத்தில் கிளை, கொப்பு என்று உறுப்புகள் பிரிவதை நினைவு கொள்ளுங்கள். உழை என்ற ஈறு கொப்பின் சிறியதைக் குறிப்பது.)
frame = வரம்பை, (வரம்பு கட்டியே ஏதொன்றையும் உருவாக்குகிறோம். வரம்பு என்பது எல்லை மட்டுமல்ல.