மினாரி (ஆங்கிலம்: Minari) (Korean: 미나리[minaɾi], அர்த்தம் - நீர் செடி) 2020 ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஐக்கிய அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். லீ ஐசக் சுங்கால் எழுதி இயக்கப்பட்டுள்லது. சுடீவன் யூன், ஹாப் யெ-ரி, ஆலன் கிம், நோயல் கேட் சோ, யூன் ய-சங், வில் பேட்டன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சுங்கின் சுயசரிதையினைத் தழுவியதாகும். அவரின் குடும்பம் 1980களில் தென்கொரியாவிலிருந்து கிராமபுர ஐக்கிய அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அனுபவித்ததை திரையாக்கியுள்ளார்.[6]
சன்டான்சு திரைப்படத் திருவிழாவில் சனவரி 26, 2020 இத்திரைப்படம் முதலில் வெளியிடப்பட்டது. இரண்டு விருதுகளையும் பெற்றது[7] இணையத்தில் திசம்பர் 11, 2020 அன்று வெளியிடப்பட்டது. மேலும் திரையரங்குகளில் பிப்ரவரி 12, 2021 அன்று எ24 ஆல் வெளியிடப்பட்டது.