மினிட்ஸ் டு மிட்நைட் (இசைத் தொகுப்பு)

மினிட்ஸ் டு மிட்நைட்
ஸ்டுடியோ
வெளியீடுமே 14, 2007 (2007-05-14)
ஒலிப்பதிவுபெப்ரவரி 2006 – ஜனவரி 2007
இசைப் பாணிராக், மெட்டல்
நீளம்43:31
இசைத்தட்டு நிறுவனம்வார்னர் பிரதர்ஸ், மிசின் ஷாப்
இசைத் தயாரிப்பாளர்ரிக் ரூபின், மைக் ஷினோடா
லிங்கின் பார்க் காலவரிசை
'மீடியோரா
(2003)
மினிட்ஸ் டு மிட்நைட் 'எ தௌசன்ட் சன்ஸ்
(2010)

மினிட்ஸ் டு மிட்நைட் (Minutes to Midnight) அமெரிக்க இசைக்குழுவான லிங்கின் பார்க்கின் மூன்றாவது இசைத்தொகுப்பு. இப்புதிய இசை தொகுப்பில் வேலை செய்வதற்கு மீண்டும் லிங்கின் பார்க் 2006 ஆமாண்டு களம் இறங்கியது. இந்த தொகுப்பை தயாரிப்பதற்காக இந்த குழு ரிக் ரூபினை தேர்ந்தெடுத்தது. இது 2006 ஆம் ஆண்டில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், சில காரணங்களால் 2007 ஆம் ஆண்டில் தான் வெளிவந்தது.[1] ஷிநோடா இந்த தொகுப்பு பாதி நிலையில் உள்ளதாக ஆகஸ்ட் 2006 இல் அறிவித்தபோது லிங்கின் பார்க் குழு இதற்காக முப்பதிலிருந்து ஐம்பது பாடல்கள் வரை ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தது.[2] பின்னர் பென்னிங்டன் இந்த இசைத்தொகுப்பு அவர்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ந்யூ மெடல் இசையை கொண்டு இல்லாமல் வேறு இசை வடிவில் வெளி வரும் என்று அறிவித்தார்.[3] வார்நேர் பரோஸ். ரெகார்ட்ஸ் இந்த குழுவின் மூன்றாவது இசைத் தொகுப்பான மினிட்ஸ் டு மிட்நைட் மே 15, 2007 அன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வெளிவரும் என்று அதிகார பூர்வமாக அறிவித்தது.[4] பதினான்கு மாதங்கள் உழைப்புக்கு பிறகு தங்கள் பதினேழு பாடல்களில் இருந்து ஐந்து பாடல்களை நீக்கி விடுவது என்று குழுவினர் முடிவு செய்தனர். டூம்ஸ்டே கிளாக்கை தழுவி வந்த இந்த இசை தொகுப்பின் பாடல் வரிகள் அதன் தலைப்புக்கு ஏற்றவாறே அமைந்திருந்தன.[5] முதல் வாரத்திலேயே 600,000 காப்பிகளுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட மினிட்ஸ் டு மிட்நைட் கடந்த சில ஆண்டுகளின் சிறந்த அறிமுக இசைத்தொகுப்பாக அறிவிக்கப்பட்டது. பில் போர்டு அட்டவணையிலும் இந்த தொகுப்பு முதல் இடத்தை பிடித்தது.

பிராக்கில் லிங்கின் பார்க், 2007.

இந்த தொகுப்பின் முதல் தனிப்பாடலான "வாட் ஐ ஹாவ் டன்" ஏப்ரல் 2 வெளிவந்தது. இது ஒரே வாரத்தில் எம்.டி.வி மற்றும் ப்யூஸ்ஸில் ஒளிப்பரப்பட்டது.[6] ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த பாடல் பில்போர்ட் , மாடர்ன் ராக் ட்ராக்ஸ் மற்றும் மெயின்ஸ்ட்ரீம் ராக் ட்ராக்ஸ் அட்டவணைகளில் முதல் இடம் பிடித்தது.[7] 2007 ஆம் ஆண்டு வெளிவந்த டிரான்ஸ்போர்மர்ஸ் என்ற திரைப்படத்தில் இந்த பாடல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த வருட முடிவில் லிங்கின் பார்க் அமெரிக்கன் ம்யூசிக் அவார்டில் "பேவரிட் அல்டேர்நெடிவ் ஆர்டிஸ்ட்" விருதை பெற்றது.[8] 2007 ஆம் ஆண்டு மற்றும் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த "ப்ளீட் இட் அவுட்", "ஷாடோ ஒப் தி டே", "கிவன் அப்", "லீவ் அவுட் ஆல் தி ரெஸ்ட்" போன்ற பாடல்கள் மிக பிரபலமாக ஆயின. மேலும் இந்த குழு பஸ்டா ரைம்சுடன் இணைத்து வெளியிட்ட தனிப்பாடல் "வி மேட் இட்" ஏப்ரல் 29 அன்று வெளிவந்தது.[9]

நோவா ராக் திருவிழாவில் லிங்கின் பார்க், 2007

ஜூலை 7, 2007 அன்று நடந்த லைவ் எர்த் ஜப்பான் லிங்கின் பார்க் சுற்றுப்பயணத்தின் முக்கிய நேரலை நிகழ்ச்சியாகும்.[10] இதனுடன் இங்கிலாந்து டோனிங்க்டன் பூங்காவில் நடைபெற்ற டவுன்லோட் பெஸ்டிவல் மற்றும் கனடாவின் டொராண்டோவில் நடந்த எட்ஜ்பெஸ்ட் நிகழ்வும் (டௌன்ஸ்வியூ பூங்கா) மிகுந்த வரவேற்பை பெற்றன. இந்த குழு தனது நான்காவது ப்ரொஜெக்ட் ரேவோல்யூஷனுடன் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டது. இதற்கு பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் நோட்டிங்ஹாம், ஷெப்பில்ட, மன்செஸ்டர் ஆகிய இடங்கள் மூலம் முதல் ஆரென சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இரு இரவுகளில் லண்டனில் தி O2 அறீனாவை முடித்துகொண்டது. பென்னிங்டன் மினிட்ஸ் டு மிட்நைட்டை தொடர்ந்து இன்னொரு இசைத் தொகுப்பை லிங்கின் பார்க் வெளியிட போவதாக அறிவித்தார்.[11] இதற்காக பிரத்தியேகமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தாங்கள் நடத்தவிருக்கும் சுற்றுப்பயணம் தங்களது தொகுப்பின் ஆக்கத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.[11] ரோலிங் ஸ்டோன் இதழுடன் நடந்த நேர்முக சந்திப்பில் பென்னிங்டன் தனது குழு, புது பாடல் வரிகளை எழுத ஆரம்பித்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தார். ஷிநோடா அதனை ஆமோதிக்கும் வண்ணத்தில் இந்த இசைத்தொகுப்பு 2009 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவரும் என்று குறிப்பிட்டு இருந்தார். மைக் ஷிநோடா "Road to Revolution: Live at Milton Keynes" என்ற நேரடி இறுவட்டு/குறுவட்டின் வருகையை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். இது ஜூன் 29 ஆம் தேதி 2008 இல் மில்டன் கெய்ன்ஸ் பௌலில் நடந்த ப்ராஜெக்ட் ரேவோல்யூஷனின் படப்பிடிப்பாகும். இது 24 நவம்பர், 2008 அன்று வெளிவந்தது.[12]

லிங்கின் பார்க் குழு

கீழே தரப்பட்டுள்ள தகவல்கள் இசைத்தட்டு வெளியீட்டின் பின் கொடுக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.[13]
  • செஸ்டர் பென்னிங்டன் – முதல் பாடகர்
  • ரோப் பூர்டன் – ட்ரம்ஸ், தட்டு வாத்தியம், பின்குரல் பாடகர்
  • பிராட் டெல்சன் – லீட் கிடார், பின்குரல் பாடகர்
  • டேவிட் "பீனிக்ஸ்" பார்ரெல் – பேஸ் கிடார், பின்குரல் பாடகர்
  • திரு. ஹான் – டர்ன்டேபிள்ஸ், ப்ரோக்ராமிங், சாம்ப்ல்ஸ், பின்குரல் பாடகர்
  • மைக் ஷிநோடா –முதல் பாடகர், ரிதம் கிடார், சாம்ப்ல்ஸ், கிபோர்டு

மேற்கோள்கள்

  1. MTV.com, மைக் ஷிநோடா, "'2006 இல் புதிய இசைத்தொகுப்பு இல்லை'" என்று கூறுகிறார் , ஜூன் 9, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
  2. MTV.com, மைக் ஷிநோடா புது தொகுப்பை பாதியளவு லிங்கின் பார்க் முடித்திருப்பதாக கூறுகிறார்.,ஜூன் 9, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
  3. MTV.com, லிங்கின் பார்க் ந்யூ மெடல் இப்பொழுது வழக்கில் இல்லை அடுத்த LP யில் சுத்தமாகவே இல்லை என்று கூறுகிறது, ஜூன் 9, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
  4. வார்நேர் பரோஸ். ரெகார்ட்ஸ், லிங்கின் பார்க் வெளியீட்டு நாளையும் தொகுப்பின் பெயரை அறிவித்ததும் விசிறிகள் மினிட்ஸ் வரும் நாளை எதிர்நோக்கி இருக்கின்றனர்.[தொடர்பிழந்த இணைப்பு], ஜூன் 9, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
  5. MTV.com, லிங்கின் பார்க் அபோகாளிப்டிக் தொகுப்பை முடிக்கிறது.ப்ரொஜெக்ட் ரேவோல்யூஷன் சுற்றுப்பயணத்தை புதுபிக்கிறது ஜூன் 9, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
  6. Videostatic, MTV 4/2/07 வாரத்துடன் கூட்டியுள்ளது பரணிடப்பட்டது 2012-10-14 at the வந்தவழி இயந்திரம்,டிசம்பர் 19, 2007 அன்று திரும்பவும் பெறப்பட்டது.
  7. Billboard.com, கலைஞரின் அட்டவணை வரலாறு - தனிப்பாடல்கள் ஜூன் 9, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
  8. ShowBuzz.com, அமெரிக்கன் இசை விருதுகள் - வென்றவர்கள் பட்டியல் பரணிடப்பட்டது 2008-07-05 at the வந்தவழி இயந்திரம்,மார்ச் 21, 2008அன்று திரும்பவும் பெறப்பட்டது.
  9. - "வி மேட் இட்" இசை அட்டவணை (கனடா), aCharts . மே 22, 2008 இல் எடுக்கப்பட்டது.
  10. Billboard.com, லிங்கின் பார்க், நமது கலைஞர்கள் ஜப்பானில் லைவ் எர்த் நிகழ்ச்சியை கோலாகாலமாக ஆரம்பிக்கின்றனர், ஜூலை 12, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
  11. 11.0 11.1 Billboard.com, லிங்கின் பார்க் 'மிட்நைட்டை' தொடர்ந்து விரைவான தொகுப்பை திட்டமிடுகிறது , பிப்ரவரி 13, 2008அன்று திரும்பவும் பெறப்பட்டது.
  12. Rollingstone.com, லிங்கின் பார்க் தனது அடுத்த தொகுப்பை எழுத ஆரம்பித்து விட்டது பரணிடப்பட்டது 2009-05-01 at the வந்தவழி இயந்திரம், மே 14, 2008அன்று திரும்பவும் பெறப்பட்டது.
  13. "Hybrid Theory by Linkin Park CD". cduniverse.com. Retrieved 2007-08-18.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya