மின்சாரம் (திரைப்படம்)
மின்சாரம் (Minsaram) என்பது 2011 ஆண்டைய இந்திய தமிழ் விழிப்புணர்வு திரைப்படம் ஆகும். என். செல்வகுமாரன் இயக்கிய இப்படத்தில் யுவராஜ், மதுச்சந்திரா, தொல். திருமாவளவன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அஜய் பிரதீப், ஆதித், கண்ணன், பாபு, சுகந்தி, முத்துசாமி, ராஜேந்திரநாத், பாலா சிங், ரமா, காதல் சுகுமார், நெல்லை சிவா ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர். எம். எஸ். தமிழரசன் மற்றும் பழனி எம். இலியாஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படத்ததிற்கு டி. தேவன் இசை அமைத்துளார். படமானது 2011 மார்ச் 18 அன்று வெளியிடப்பட்டது. நடிகர்கள்
தயாரிப்பு18 வயசு புயலே (2007) திரைப்படத்தை தயாரித்த பின்னர், தயாரிப்பாளர்கள் மாணவர்களின் ஆற்றல் குறித்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தனர். என். செல்வகுமாரன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். புதுமுகம் யுவராஜ் மற்றும் மதுச்சந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக முதல்வர் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். மேலும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கான பாடல் வரிகளையும் எழுதினார்.[1][2][3] இசைபடத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் டி. தேவன் அமைத்தார். 2009 இல் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில், தொல். திருமாவளவன், முத்து விஜயன், சண்முக சீலன், வானவன், டி. தேவன் ஆகியோரால் எழுதபட்ட ஏழு பாடல்கள் இடம்பெற்றறன.[4]
வெளியீடுஇத்திரைப்படம் 2011 மார்ச் 18 அன்று முத்துக்கு முத்தாக, அவர்களும் இவர்களும், லத்திகா ஆகிய படங்களுடன் சேர்ந்து வெளியானது.[5] ரோஹித் ராமச்சந்திரன் இப்படத்திற்கு 5 க்கு 0.5 மதிப்பெண் இட்டு, "நீங்கள் பொழுதுபோக்கு அல்லது கலையை எதிர்பார்கிறீர்கள் என்றால், ஏமாற்றமடைவீர்கள். இது தொல் திருமவாளவனின் இரண்டு மணி நேர தேர்தல் பிரச்சாரமாகும். மேலும் "மின்சாரத்துக்கு உயிர் இல்லை, உங்கள் வாக்குகளைப் பெறத் தவறிவிட்டது " என்று முடித்தார்.[6] தொல். திருமாவளவனின் உரையாடல் பாங்கையும், கானா உலகநாதன் பாடிய படலையும் தினமலர் பாராட்டியது. ஆனால் எழுத்தையும், கோணங்களையும் விமர்சித்தது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia