மின் அதிர்ச்சி
மின் அதிர்ச்சி (Electric shock) என்பது மனித உடல் வழியாக மின்சாரம் பாயும்போது உடலில் ஏற்படும் உடலியல் வினை அல்லது காயம் ஆகும்[1] . பொதுவாக, மின்சாரத்தின் ஒரு கெடுதலான வெளிப்பாடு என்பதை விவரிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மனித உறுப்புகளில் ஒன்று ஏதாவதொரு மின்சார மூலத்துடன் தொடர்பு கொள்ள நேரிடும்போது போதுமான அளவு மின்சாரம் தோல், தசைகள், அல்லது முடி போன்ற மனித உடல் பகுதியில் மின்சாரம் பாய்கிறது. மிகக்குறைந்த அளவிலான மின்சாரம் புலப்படாமல் போகலாம். பெரிய அளவிலான மின்னதிர்ச்சிக்கு ஆளான ஒருவர் மின் இணைப்புற்ற ஒரு பொருளுக்கு அருகில் செல்ல முடியாதவாறு மாற்றப்படலாம்[2] . இன்னும் பெரிய அளவிலான மின்சாரம் உடலில் பாய நேர்ந்தால் இதயம் அதிர்ச்சிக்குள்ளாவது மற்றும் தசைகளில் பாதிப்பையும் ஏற்படுத்தும். மின் அதிர்ச்சியால் ஏற்படும் மரணம் மின் அதிர்ச்சி இறப்பு என்று அழைக்கப்படுகிறது. ஒரு மின் அதிர்ச்சியால் ஏற்படும் விபத்து பல விளைவுகளைக் ஏற்படுத்துகிறது. மின்சாரம் நரம்பு மண்டலம் வழியாக பயணம் செய்ய நேரிட்டு வழியில் உள்ள இணைப்புத் திசுக்களை எரித்து விடுகிறது. உடலில் எங்குவேண்டுமானாலும் நம்பமுடியாத அளவுக்கு வினோதமான அறிகுறிகளை வெளிப்படுத்தும் மற்றும் சிக்கலான பகுதிகளில் வலியுண்டாக்கும் நோய்களுக்கு வழிவகுக்கும்.மின்கம்பி அமைப்பு அல்லது மற்ற உலோக வேலைகளில் காணப்படும் அபாயகரமான மின்னழுத்தம் நேரடியான மின்னதிர்ச்சிக்கு வழிவகுக்கிறது. நேரடியான அல்லது மறமுகமான தொடர்புகள் மின்னதிர்ச்சிக்கு காரணமாகின்றன. மின்னதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பகுதியை தவறுதலாக தொடுவதால் ஏற்படும் தொடர்பை மறைமுக தொடர்பு என்கிறோம். மறைமுக மின் தொடர்பைத் தவிர்க்க நேரடியான மின்தொடர்பில் இருந்து தப்பிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். மின் சாதனங்களின் உலோக பாகங்கள் நல்ல நில பிணைப்புள்ளதா என்று கவனித்தால் மறைமுக மின் தொடர்பை தவிர்க்க முடியும். தானாகவே மின்னிணைப்பைத் துண்டிக்கும் கருவிகளை மின்கம்பி அமைப்பில் இணைத்தும் பயன்படுத்தலாம்.[3] மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia