மிருகம் (திரைப்படம்)
மிருகம் திரைப்படம் சாமி இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்தார். அவருக்கு இணையாக பத்மபிரியா ஜானகிராமன் நடித்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் ஆவார்.[1] சர்ச்சைஇத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் சாமி நடிகை பத்மபிரியாவை அறைந்துவிட்டதாக கூறப்பட்டது. அதன் காரணமாக இயக்குனருக்கு ஓராண்டு காலம் திரைப்படத்தினை இயக்க தடைவிதிக்கப்படாலும், இரு தரப்பும் சமாதானமாகி திரைப்படம் குறித்த நேரத்தில் வெளி வந்தது.[2] விமர்சனம்ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "எய்ட்ஸ் நோயின் கொடூர பக்கங்களை வெளிச்சமிடுவதுதான் இயக்குநரின் நோக்கம் என்றால், பின்பாதி பகீர் காட்சிகளே அதற்குப் போதும்! முன்பாதி காட்சிகளின் நோக்கம் வேறெதுவோ என்றே எண்ணத் தோன்றுகிறது. இல்லாவிட்டால், இது செல்லமான மிருகம்தான்!" என்று எழுதி 40100 மதிப்பெண்களை வழங்கினர்.[3] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia