மிலாப் சந்த் ஜெயின்
மிலாப் சந்த் ஜெயின் (Milap Chand Jain)(21 ஜூலை 1929 [1] -29 ஏப்ரல் 2015 [2] ) என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி, இராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநர் மற்றும் இராஜஸ்தான் மாநில லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைவர் ஆவார். ஜெயின் 1929ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்தார். இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்ற பிறகு இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்ற இவர், 1978ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். ஜெயின் ஆணையம்இராஜீவ் காந்தியின் படுகொலையில் தொடர்புடைய சந்தேகமாகக் கருதப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்களை விசாரணை செய்ய இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஜெயின் ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 1990ஆம் ஆண்டு குறுகிய கால ராஜஸ்தான் மாநில ஆளுநராகப் பதவி வகித்தார். மறைவுமிலாப் சந்த் ஜெயின் தமது 86வது அகவையில் உடல்நலக் குறைவால் ஜெய்ப்பூரில் காலமானார்.[3] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia