மீனா நாராயணன்

மீனா நாராயணன்
பிறப்பு1905
சிவகங்கை, தமிழ்நாடு
இறப்பு1954
செயற்பட்ட ஆண்டுகள்1934-1938
அறியப்படுவதுஇந்தியாவின் முதல் பெண் ஒலிப்பதிவு பொறியாளர்
வாழ்க்கைத்
துணை/கள்
பெற்றோர்பர்வதவர்தினி (தாய்) சீதாராமன் (தந்தை)
உறவினர்கள்

மீனா நாராயணன் (Meena Narayanan) என்பவர் இந்தியத் திரைப்பட உலகின் முதல் பெண் ஒலிப்பதிவாளராவார்.[1]

இளமைக் காலம்

மீனா, 1905 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் பர்வதவர்த்தினி, சீதாராமன் இணையருக்கு மகளாகப் பிறந்தார். சீதாராமன் சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளராகப் பணியாற்றியவர்.[2] மீனாவின் சித்தி லோகசுந்தரி, இயற்பியல் அறிஞர் ச. வெ. இராமனின் இணையர் ஆவார். மீனா உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும், அன்றைய வழக்கப்படி சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டது. இவரின் கணவர் ஏ. நாராயணன் தென்னியந்தியத் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராவார்.[3]

ஒலிப்பதிவுப் பணி

தமிழ்த் திரையுலகில் மௌனப்படங்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த காலத்தில், முதல் முறையாக ‘சவுண்டு ஸ்டுடியோ’ ஒன்றை சென்னை சேத்துப்பட்டு/கீழ்ப்பாக்கம் பகுதியின் பூந்தமல்லி சாலையில் உள்ள நாடார் தோட்டத்தில் அமைத்தார். ‘ஸ்ரீ ஸ்ரீனிவாச சினிடோன்’ அல்லது ‘சவுண்ட் சிட்டி’ தென்னிந்தியாவின் முதல் பேசும் ஒலிப்பதிவுக் கலைக்கூடம் ஆகும்.[3]

நாராயணன் மும்பையிலிருந்து ஒலிப்பதிவுக் கலைஞர் பொத்தார் என்பவரை அழைத்து வந்து நியமித்தார். ஒலிப்பதிவு உதவியாளர் பணிக்கு மனைவி மீனாவை அமர்த்திய நாராயணன், அதே ஆண்டு ஸ்ரீநிவாச கல்யாணம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கினார். இதன் மூலம் மீனா ஒலிப்பதிவு நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். [4]

1936-ஆம் ஆண்டு பொத்தார் பணியிலிருந்து விலகிவிட்டார். அதன் பிறகு மீனா ஸ்ரீனிவாச சினிடோனின் ஒலிப்பதிவாளராக நியமிக்கப்பட்டார். கணவர் நாராயணன் இயக்கிய விஸ்வாமித்ரா படத்தின் ஒலிப்பதிவை இவர் தனியே செய்தார். 1937-ஆம் ஆண்டு கிருஷ்ண துலாபாரம், விக்கிரம ஸ்தீரி சாகசம், 1938-ஆம் ஆண்டு துளசி பிருந்தா, போர் வீரன் மனைவி, மட சாம்பிராணி, ஸ்ரீ ராமானுஜர், விப்ர நாராயணா என்று தொடர்ச்சியாக  நாராயணன் தயாரித்து இயக்கிய திரைப்படங்களில் ஒலிப்பதிவுப் பொறியாளராக மீனா பணியாற்றியுள்ளார்.[2]

இறப்பு  

1939-ஆம் ஆண்டு நாராயணன் தன் 39-ஆவது வயதில் காலமானார். அதற்குப் பிறகு மீனாட்சி தன் பணியைத் தொடரவில்லை.1954-ஆம் ஆண்டு அவர் மாரடைப்பு காரணமாகக் காலமானார்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 லூயிஸ், நிவேதிதா (2021). முதல் பெண்கள் (2 nd ed.). மைத்ரி புக்ஸ். p. 142.
  2. 2.0 2.1 "India's first woman sound engineer, unsung yet". THE HINDU.
  3. 3.0 3.1 "சினிமாவின் கோட்டையாகச் சென்னையை மாற்றியவர்!". கட்டுரை. தி இந்து. 23 திசம்பர் 2016. Retrieved 13 சனவரி 2017.
  4. "தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: சினிமாவின் கோட்டையாகச் சென்னையை மாற்றியவர்!". Hindu Tamil Thisai. 2016-12-23. Retrieved 2025-04-13.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya