மீமுரண் மயிர்நோய்
மீமுரண் மயிர்நோய் (Hypertrichosis) அல்லது அம்ப்ராசு கூட்டறிகுறி (Ambras Syndrome) அல்லது ஓநாய் நோய் என்பது உடலெங்கும் அளவுக்கு அதிகமாக முடி வளர்ச்சி ஏற்படுத்தும் தாக்கம் கொண்டுள்ளது தான் ஓநாய் நோய்.[1][2] ஓநாய் மனிதர் என்று கற்பனைக்கதைகளில் தோன்றுபவர்களின் முகத்தைப்போல இக்குறைபாடு உடையவர்கள் தோற்றப்பாடு கொண்டிருப்பதால் ஓநாய் நோய் என்றும் பேச்சு வழக்கில் அழைக்கப்படுகின்றது.[3][4] இது பிறப்புக்குறையாக பிறப்பிலோ அல்லது அதற்குப் பின்னரோ ஏற்படலாம்.[4][5] இருவகையான மீமுரண் மயிர்நோய் ஏற்படலாம்: ஒன்று பரந்தது; உடலின் எல்லாப்பகுதிகளிலும் ஏற்படலாம், மற்றையது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மற்றும் ஏற்படும் நிலை. அம்ப்ராசு கூட்டறிகுறி பிறப்பிலேயே ஏற்படலாம், அல்லது பிற்கால வாழ்க்கைப் பகுதியிலும் ஏற்படலாம். பொதுவாக, ஆண்மை இயக்குநீரால் (ஆந்த்ரோசன்கள்) வயது செல்லச்செல்ல மீசை, தாடி நெஞ்சுப் பகுதிகளில் முடிவளர்ச்சி ஏற்படுகின்றது, ஆனால் அம்ப்ராசு கூட்டறிகுறியில் ஆண்மை இயக்குநீரால் முடிவளர்ச்சி ஏற்படக்கூடும் இடங்களில் முடிவளருவதில்லை, மாறாக ஏனைய பகுதிகளில் வளருகின்றது. ஆண்மை இயக்குநீரால் பெண்களுக்கு ஏற்படும் முடிவளர்ச்சி ஆண்மை இயக்குநீர் மயிர்மிகைப்பு (Hirsutism) எனப்படுகின்றது. வரலாறுமுதன்முதலில் வரலாற்றில் இதனைப் பற்றிய பதிவு 1648இல் அல்ற்ரோவாண்டசு என்பவரால் இசுப்பானிய கனரித்தீவில் பெற்ரசு கொன்சலசு என்பவரில் அறியப்பட்டது, பெற்ரசின் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே வழமைக்கு மாறான மயிர் வளர்ச்சி கொண்டிருந்ததைக் கண்ணுற்ற அல்ற்ரோவாண்டசு அவர்களை அம்ப்ராசுக் குடும்பம் என அழைத்தார், ஏனெனில் அவர்கள் வசித்த இடம் அம்ப்ராசுக் கோட்டையின் அருகாமையில் இருந்தது. அதன் பின்னரான 300 வருட காலப்பகுதிகளில் 50 சம்பவங்கள் அறியப்பட்டுள்ளது. வகைகள்பிறப்பு மீமுரண் மயிர்நோய்மரபியல் வேறுபாட்டால் ஏற்படுபவை, பிறப்பின் போதே காணப்படும். இவற்றில் அரும்புமுடி மீமுரண் மயிர்நோய் (Hypertrichosis lanuginose) என்பது பிறந்த குழந்தையில், முகம் முழுவதும் மெல்லிய குறுகிய மென் அரும்பு மயிர் இருத்தல் ஆகும். மென் அரும்பு முடி(Lanugo) என்பது கருப்பையில் குழந்தை இருக்கும் போது வளர்ச்சியுரும் மயிர் ஆகும், பிறக்கமுன்னரே இவை உதிர்ந்து இயல்பான மயிர்களால் ஈடுசெய்யப் பட்டிருக்கும். ஒரு குழந்தை குறைப்பிரசவத்தால் பிறந்துள்ளது என்பதை மென் அரும்பு மயிர் காணப்படுதலைக் கொண்டு அறியலாம். ஈற்று மீமுரண் மயிர்நோய் எனும் நிலையில் உடல் முழுவதுமே மயிர் வளர்ச்சி ஏற்படும், இத்தகைய சந்தர்ப்பம் ஓநாய் மனிதர் என்பதற்குச் சாலப்பொருந்துகின்றது, இவர்களுக்கு பல்லின் முரசும் மிகை வளர்ச்சிக்கு உட்படும் என்பது அறியப்பட்டுள்ளது. பெற்றுக்கொண்ட மீமுரண் மயிர்நோய்பிறப்பின் பின்னர் ஏதோ ஒரு காலப்பகுதியில் ஏற்படும்; மருந்து வகைகள் போன்ற புறக்காரணிகளால் இவை ஏற்படலாம். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia