சிராஜ் 13 மார்ச் 1994 அன்று ஜதராபாத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆட்டோ ரிக்சா டிரைவர், அவரது தாயார் இல்லத்தரசி. [2]
உள்நாட்டுத் துடுப்பாட்டம்
2015–16 ரஞ்சி கோப்பை போட்டியில் ஜதராபாத் அணிக்காக 15 நவம்பர் 2015 அன்று சிராஜ் தனது முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். [3] இவர் 2015–16 சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் 2 சனவரி 2016 அன்று இருபதுக்கு -20 போட்டியில் அறிமுகமானார். [4] 2016–17 ரஞ்சி கோப்பை போட்டியில் ஜதராபாத் துடுப்பாட்ட அணிக்காக 18.92 பந்து வீச்சு சராசரியில் 41 இலக்குகளை வீழ்த்தினார். [5]
பன்னாட்டு துடுப்பாட்டம்
அக்டோபர் 2017 இல், நியூசிலாந்துக்கு எதிரான பன்னாட்டு இருபது20தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார். [6] 4 நவம்பர் 2017 அன்று நியூசிலாந்திற்கு எதிராக தனது முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார். [7]