முகம்மது சாஹ்ஷாட்
முகம்மது சாஹ்ஷாட் (Mohammad Shahzad), பிறப்பு: சூலை 15 1991, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 2 தேர்வுத் துடுப்பாட்டம் 84 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10, 2019/11 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். சூன் 2018 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஆப்கான் அணி விளையாடிய முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய பதினொரு வீரர்களில் இவரும் ஒருவர். மேலும் இவர் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இந்திய அணிக்கு எதிராக நூறு ஓட்டங்களைப்பதிவு செய்தார். ஆனால் அந்த அணி 131 ஒட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஒரு வீரர் நூரு ஓட்டங்கள் எடுத்தும் மிகக் குறைவான ஓட்டங்களைப் பதிவு செய்த துடுப்பாட்ட அணி எனும் சாதனையினை சாகித் அபிரிடியுடன் சமன் செய்தார்.[1] ஆரம்பகால வாழ்க்கைசாஹ்சாட் ஆப்கானித்தான் மாகாணம் நன்கிரஹார் மாகாணத்தில் சூலை 15 1991 இல் பிறந்தார். பின் பாக்கித்தானில் உள்ள பெஷாவர் அகதிகள் முகாமிற்கு இவர்களின் குடும்பம் குடிபெயர்ந்தது. தனது வாழ்க்கையின் பெரும்பாலான காலகட்டங்களை இவர் பெசாவரிலேயெ கழித்தார்.மேலும் திருமணமும் அங்கு தான் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு வரை இவர் பெசாவர்அகதிகள் முகாமில் தான் இருந்தார்.பின் ஆப்கானித்தான் துடுப்பாட்ட வாரியம் கேட்டுக் கொண்டதற்கினங்க இவர் ஆப்கானித்தான் திரும்பினார்.[2] சர்வதேச போட்டிகள்2008 ஆம் ஆண்டு முதல் இவர் ஆப்கானித்தான் அணி சார்பாக விளையாடி வருகிறார். 2009 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடரில் இவர் விளையாடினார். அதன்பிறகு இவர் தேர்வுத் துடுப்பாட்டம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார்.[3] முதல்தரத் துடுப்பாட்டம்2009–20102009-10 ஆம் ஆண்டுகளுக்கான கண்டங்களுக்கு இடையிலான கோப்பைத் தொடரில் இவர் அறிமுகமானார். 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதாரே விளையாட்டு சங்கத்தில் நடைபெற்ற சிம்பாப்வே லெவன் அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 79 ஓட்டங்களை எடுத்தார்.[4] 2010 ஆம் ஆண்டில் அயர்லாந்து அணிக்கு எதிரான துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 88 ஓட்ட்டங்களையும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். [5] 2010 ஆம் ஆண்டில் கனடா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 214 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருநூறு ஓட்டங்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார். [6][7] கண்டங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஐம்பது ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.[8] அந்தத் தொடரில் 802 ஓட்டங்களை 80.20 எனும் சராசரியோடு எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார். அதில் இரன்டு நூறுகளும் ஐந்து ஐமது ஓட்டங்களும் அடங்கும். மேலும் 25 கேட்சுகளும் 3 ஸ்டம்பிங் செய்தார்.[9][10] சான்றுகள்
வெளி இணைப்பு
|
Portal di Ensiklopedia Dunia