முகவிப் படிமம்

முகவிப் படிமம் (Agent-based model) என்பது ஒரு கணிப்பொறி மனிதனைப் போல சிந்தித்துச் செயல் பட முடியுமா என்று ஆராயும் துறையாகும். இந்த முயற்சியில் பயன்படுத்தப்படும் ஒரு கருத்தே முகவிப் படிமம் என்பது. எடுதுக்காட்டாக, சாரையாகச் சென்று இரையைக் கொண்டு வந்து புற்றில் வைக்கும் ஒரு எறும்புக் கூட்டத்தைக் கணிப்பொறித் திரையில் காட்ட வேண்டுமாயின், அதற்கு முதலில் ஒரு செய்நிரல் எழுத வேண்டும். அந்த நிரலி எழுதுவதற்கு முன், எறும்புகள் இரை கொண்டு வந்து வைக்கும் காட்சிக்கு ஒரு படிமம் தேவை. இதைச் செயற்கை அறிவு கொண்டு செய்வதாக இருந்தால், ஒவ்வொரு எறும்பையும் ஒரு முகவியாகப் படிமம் எடுத்துக் கொள்வர். இது போன்ற படிமத்தை முகவிப் படிமம் என்று சொல்லலாம்.

முகவிப் படிமம் என்ற ஆராய்ச்சித் துறையில் பல்வேறு துறைகளில் இருந்து கருத்துக்கள் கொணரப்பட்டு, பின் முகவிகள் உருவாக்கப் படுகின்றன. எடுத்துக் காட்டாக, ஆட்டக் கோட்பாடு, பல்கூட்டு ஒருங்கியம் (complex systems), வெளிப்படல் (emergence), கணினிக் குமுகாயவியல் (computational sociology), பல்-முகவி ஒருங்கியம் (multi-agent systems) மற்றும் படிவளர்ச்சி நிரலாக்கம் (evolutionary programming) போன்ற துறைகளைச் சொல்லலாம்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya