முசுமுசுக்கை
முசுமுசுக்கை (தாவரவியல் பெயர்: முகியா மேடரசுபட்டானா-Mukia maderaspatana) என்பது கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல், சுவாசப்பையின் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.[1] பெயர்முசுமுசுக்கைக்கு முசுக்கை, இருகுரங்கின் கை, மொசுமொசுக்கை, அயிலேயம் ஆகிய வேறு பெயர்கள் உள்ளன. இத்தாவரம் முழுவதும் ரோம வளரிகளைக் கொண்டிருப்பதால், தடவும்போது, ‘முசுமுசு’வென்ற உணர்வைக் கொடுப்பதால் ‘முசுமுசு’க்கை என்று பெயர் பெற்றது.[2] முசுமுசுக்கை தைலம்முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia