முதலாம் ஜஸ்டினியன்
முதலாம் ஜஸ்டினியன் (இலத்தீன்: Flavius Petrus Sabbatius Justinianus Augustus, கிரேக்கம்: Φλάβιος Πέτρος Σαββάτιος Ἰουστινιανός Flábios Pétros Sabbátios Ioustinianos, பி. 482, இ. நவம்பர் 14, 565) 527 முதல் 565 வரை பைசாந்தியப் பேரரசின் பேரரசராக இருந்தார். இலத்தீன் தாய்மொழியாக வைத்துக்கொண்டிருந்த கடைசி ரோமப் பேரரசர் இவர். ஜஸ்டினியன் ஆட்சி காலத்தில், முன்னாள் ரோமப் பேரரசின் மேற்கு பகுதிகளை மறுபடி கைப்பற்ற முயற்சி செய்து, வடக்கு ஆப்பிரிக்கா, இத்தாலி, ஐபீரிய மூவலந்தீவு, கிழக்கு ஐரோப்பா ஆகிய இடங்களை கைப்பற்றியுள்ளார்.[1][2][3] ஜஸ்டினியன் ஆட்சிக்காலத்தில் பைசாந்தியப் பேரரசின் சட்டம், கட்டிடக்கலை, பொருளாதாரம் முன்னேறி வந்தது. ஹேகியா சோபியா உள்ளிட்ட பல புகழ்பெற்ற கட்டிடங்களின் உருவாக்கத்தை மேற்பார்வையிட்டார். ஜஸ்டினியனால் வெளியிடப்பட்ட கோர்ப்பஸ் ஜூரிஸ் சிவிலிஸ் என்கிற சட்ட நூல், பல நாடுகளில் இன்று வரை பயனில் உள்ள குடிமையியல் சட்ட முறையின் அடிப்படையாக அங்கீகரிக்கப்படுகிறது. கிழக்கு மரபுவழி திருச்சபையில் ஜஸ்டினியன் புனிதராக வணங்கப்படுகிறார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia