முதல்நிலை மதுசாரம்![]() ![]() முதல்நிலை மதுசாரம் அல்லது முதன்மை ஆல்ககால் (primary alcohol) என்பது ஓரு மதுசாரம் உள்ள முதல்நிலை கார்பன் அணுவுடன் ஐதராக்சில் குழு இணைந்திருத்தல் ஆகும். எந்தவொரு ஆல்ககால் மூலக்கூறில் “–CH2OH” குழு உள்ளதோ அந்த ஆல்ககாலை ஓரிணைய ஆல்ககால் என்றும்கூட வரையறை செய்யலாம்[1]. மாறாக ஓர் இரண்டாம்நிலை மதுசாரம் “–CHROH” என்ற குழுவைக் கொண்டுள்ளது மற்றும் மூன்றாம்நிலை மதுசாரம்“–CR2OH” என்ற குழுவையும் கொண்டுள்ளது. இங்கு “R” என்பது கார்பனைப் பெற்றுள்ள குழுவைக் குறிக்கிறது. முதல்நிலை மதுசாரத்திற்கு எத்தனால் மற்றும் பியூட்டனால் போன்றவை உதாரணங்களாகும். மெத்தனாலும் ஒரு முதல்நிலை மதுசாரம் என்பதற்கும் பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின் 1911 ஆம் ஆண்டு பதிப்பு உள்ளிட்ட சில ஆதாரங்கள் உள்ளன[2][3] including the 1911 edition of the பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்,[4]. ஆனால் நவீன நூல்களில் இக்கருத்து குறைவாகவே உள்ளது. மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
|
Portal di Ensiklopedia Dunia