முத்தம்பாளையம்
முத்தம்பாளையம் (ஆங்கிலம்: Muthampalayam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] கடல் மட்டத்திலிருந்து சுமார் 232 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள முத்தம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°17′33″N 77°41′09″E / 11.292510°N 77.685874°E ஆகும். ஈரோடு, காசிபாளையம், அரங்கம்பாளையம், மூலப்பாளையம், மூலப்பட்டறை, முள்ளாம்பரப்பு மற்றும் கஸ்பாபேட்டை ஆகியவை முத்தம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், முத்தம்பாளையம் பகுதியின் மொத்த மக்கள் தொகை 1,809 ஆகும்.[3] ஈரோடு மாவட்டத்தில் குளத்துப்பண்ணை மற்றும் அசோகபுரி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருந்தோர்களுக்கு மாற்று ஏற்பாடுகளாக, முத்தம்பாளையத்தில், தமிழ்நாடு அரசால், ரூ.21.27 கோடியில் 256 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.[4] இங்கு அமைந்துள்ள முத்தம்பாளையம் மாரியம்மன் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[5] முத்தம்பாளையம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[6] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia