முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் அல்லது பல்லேகலை பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் (Muttiah Muralitharan International Cricket Stadium) இலங்கையின் கண்டியில் புதியதாக உருவாக்கபட்டுள்ள ஓர் துடுப்பாட்ட அரங்கமாகும். நவம்பர் 27, 2009 அன்று அரங்கம் திறக்கப்படடது. இது இலங்கையின் புகழ்பெற்ற துடுப்பாட்ட சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நினைவாக சூலை 2010 அன்று, மத்திய மாகாண அவையின் முழுமையான ஒப்புதலுடன், மறுபெயரிடப்பட்டது.[1] இருப்பிடமும் பின்னணியும்கண்டி நகரிலிருந்து அரைமணிநேரப் பயணத்தில் இந்த அரங்கம் அமைந்துள்ளது.[2] பல்லேகல அரங்கம் முழுமையும் இலங்கைத் துடுப்பாட்டத்திற்கு உரிமையானதாம். 1983ஆம் ஆண்டு முதல் 2007 வரை பன்னாட்டுப் போட்டிகள் நடந்த அசுகிரிய அரங்கத்திற்கு மாற்றாக இது அமையும். அரங்கத்தை அரசு பொறியியல் நிறுவனம் (State Engineering Corporation of Sri Lanka) கட்டியுள்ளது. இதன் வடிவமைப்பு தென்னாபிரிக்காவில் உள்ள சென்சுரியன் சூப்பர்பார்க் அரங்கத்தை ஒத்துள்ளது. இந்த அரங்கமும் அம்பாந்தோட்டை அரங்கமும் 2011 உலகக்கிண்ணப்போட்டிகளுக்காக தயார் செய்யப்பட்டன. பல்லேகல கந்துரத துடுப்பாட்ட அணியின் அரங்கமும் ஆகும்.[3][4][5] செய்தித்துளிகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்![]() விக்கிமீடியா பொதுவகத்தில்,
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் என்பதில் ஊடகங்கள் உள்ளன. |
Portal di Ensiklopedia Dunia