முன்படப்பக்கம்

இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:

நூல் வடிவமைப்பு

1722 ஆம் ஆண்டைச் சேர்ந்த மத்தியாசு குளொசுத்தர்மேயிர் என்னும் நூலின் முன்படப்பக்கத்தையும், தலைப்புப் பக்கத்தையும் காட்டும் படம்.

முன்படப்பக்கம் என்பது ஒரு நூலில், தலைப்புப் பக்கத்துக்கு எதிர்ப் பக்கத்தில் காணப்படும் படத்துடன் கூடிய ஒரு பக்கம் ஆகும். தலைப்புப் பக்கத்தை விரிக்கும்போது பொதுவாகத் தலைப்புப் பக்கம் வலப்பக்கத்திலும், முன்படப்பக்கம் இடப்பக்கத்திலும் இருக்கும். விவிலியம் போன்ற மதிப்புமிக்க பழைய நூல்களில் இப் பக்கம் நுணுக்கமான அழகூட்டல்களுடன் கூடிய பக்கமாக அமையும். இவ்வாறான பல படங்கள் புகழ்பெற்ற வரைகலை உருப்படிகளாகவும் உள்ளன. நூலின் உள்ளடக்க விடயத்துடன் தொடர்புள்ள படங்களே இப்பக்கத்தில் அமைவது வழக்கம். இது நூலில் விவரிக்கப்படும் ஒரு காட்சியாகவோ அல்லது ஒளிப்படங்களாகவோ இருக்கலாம். தற்கால நூல்களில் இப்பக்கம் காணப்படுவது குறைவு.

இவற்றையும் பார்க்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya