முப்பது ஆண்டு அமைதி ஒப்பந்தம்முப்பது ஆண்டு அமைதி ஒப்பந்தம் (Thirty Years' Peace) என்பது பண்டைய கிரேக்க நகர அரசுகளான ஏதென்ஸ் மற்றும் எசுபார்த்தா இடையே கிமு 446/445 இல் கையெழுத்தான ஒரு ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் பொதுவாக முதல் பெலோபொன்னேசியன் போர் என்று அழைக்கப்படும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பின்னணிஇந்த ஒப்பந்தத்தின் நோக்கம் மற்றொரு போர் வெடிப்பதைத் தடுப்பதாகும். ஆனால், கிமு 431 இல் இரண்டாம் பெலோபொன்னேசியப் போர் வெடித்ததன் மூலம் அமைதி உடன்படிக்கை அதன் இலக்கை அடையாமல் தோல்வியடைந்தது. இந்த ஒப்பந்ததின் காரணமாக ஏதென்ஸ் பெலோபொன்னீசியாவில் ஆதிக்கம் கொண்டிருந்த அனைத்து பகுதிகளையும் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. இதில் மெகாரியன் துறைமுகங்களான நிசீயா மற்றும் பாகீ மற்றும் அர்கோலிசில் உள்ள திரோசென் மற்றும் அக்கீயா ஆகியவை அடங்கும். ஆனால் ஏதெனியர்கள் நவப்பாபாக்டசை வைத்திருக்க ஸ்பார்டான்கள் ஒப்புக்கொண்டனர். [1] மற்றபடி அச்சமயத்தில் ஏதென்சு, எசுபார்த்தா ஆகியவற்றுக்கு உட்பட்டு உள்ள பகுதிகளில் எந்த மாற்றங்களும் இல்லை. எசுபார்த்தாவிற்கும் ஏதென்சுக்கும் இடையில் ஆயுதம் ஏந்திய மோதலை இது தடுத்தது. ஒரு நாட்டின் அணியில் உள்ள நேசநாட்டை இன்னொரு நாடு தன் அணியில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. நடுநிலையில் உள்ள நாடுகள் எசுபார்த்தா அல்லது ஏதென்சு ஆகிய இரு அணிகளிலும் சேரலாம். இதனால் ஒவ்வொரு அணியிலும் உள்ள கூட்டாளிகளின் முறைப்படுத்தப்பட்ட பட்டியல் இருந்ததைக் குறிக்கிறது. [2] ஏதென்சு மற்றும் எசுபார்த்தா மற்ற அனைத்து பிரதேசங்களையும் நடுநிலையில் வைத்திருக்கும். இது ஏதென்சு, எசுபார்த்தா தலைமையிலான இரண்டு கூட்டணிகளையும் சட்டபூர்வமானதாக அங்கீகரித்தது. ஏதென்சுக்கும் எசுபார்த்தாவுக்கும் தகறாறுகள் ஏற்பட்டால் மத்தியஸ்தர் மூலமாக தீர்த்துக் கொள்ளவேண்டும். எவ்வாறாயினும், முப்பது ஆண்டு அமைதி ஒப்பந்தமானது பதினைந்து ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. எசுபார்த்தன்கள் ஏதெனியர்கள் மீது போரை அறிவித்த பிறகு இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அமைதி காலத்தில், ஏதெனியர்கள் கிமு 435 இல் எபிடாம்னஸ் மற்றும் கோர்சிரா மீதான தகராறில் ஈடுபட்டனர். இது எசுபார்த்தாவின் கூட்டாளிகளாக இருந்த கொரிந்தியர்களை கோபப்படுத்தியது. கொரிந்தியன்-கோர்சிரன் தகராறில் பங்கேற்றதற்காக எசுபார்த்தன் கூட்டாளியான மெகாராவுக்கு எதிராக ஏதென்சு வர்த்தகத் தடைகளை அமல்படுத்தியது. 432 இல், ஏதென்சு பொடியாவைத் தாக்கியது, இது பட்டியலிடப்பட்ட கூட்டாளியாக இருந்தது. ஆனால் கொரிந்திய குடியேற்றமாக இருந்தது. இதில் எழுந்த சர்ச்சைகள் ஏதெனியர்கள் ஒப்பந்தத்தை மீறியதாக எசுபார்த்தன்களை அறிவிக்க தூண்டியது. எசுபார்த்தா போரை அறிவித்தது, முப்பது ஆண்டு அமைதி ஒப்பந்த காலத்துக்கு முன்பே இரண்டாம் பெலோபொன்னேசியப் போர் தொடங்கியது. சாமியான் கலகம்![]() முப்பது ஆண்டு அமைதி ஒப்பந்த காலம் முதன்முதலில் கிமு 440 இல் சோதனைக்கு உள்ளானது. ஏதென்சின் சக்திவாய்ந்த கூட்டாளியான சாமோஸ் ஏதென்சுடனான கூட்டணியிலிருந்து கிளர்ச்சி செய்தது. கிளர்ச்சியாளர்கள் விரைவில் ஒரு பாரசீக ஆளுநரின் ஆதரவைப் பெற்றனர், மேலும் ஏதென்சு அதன் பேரரசு முழுவதும் கிளர்ச்சிகள் ஏற்படும் நிலையை எதிர்கொண்டது. அந்த நேரத்தில் எசுபார்த்தன்கள் தலையிட்டால், பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இருந்த ஏதெனியர்களை எளிதில் நசுக்க முடியும், ஆனால் எசுபார்த்தன்கள் போருக்குச் செல்லலாமா வேண்டாமா என்று விவாதிக்க தங்கள் கூட்டணியின் பேராயத்தை கூட்டியபோது, போருக்குச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. அச்சமயம் ஏதெனியர்களுடனான போரை எதிர்ப்பதில் கொரிந்தியர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர். [3] கோர்சிரா மற்றும் கொரிந்து![]() கோர்சிராவிற்கும் கொரிந்துக்கும் இடையிலான போர் இந்த அமைதி ஒப்பந்ததில் சிக்கலை ஏற்படுத்தியது. இது அமைதி ஒப்பந்தத்தின் முடிவு மற்றும் பெலோபொன்னேசியன் போரின் தொடக்கத்திற்கான உடனடி காரணங்களில் ஒன்றாகும். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia