முப்பரிமாணம் (2017 திரைப்படம்)
முப்பரிமாணம் இத்திரைப்படம் 2017 ல் வெளிவந்த காதல் கலந்த சுவாரசியமான திரைப்படமாகும். அதிரூபன் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் சாந்தணு பாக்கியராஜ் மற்றும் சிருஷ்தி டாங்கே ஆகியோரும் இவர்களுடன் ஸ்கண்டா அசோக், ரவி பிரகாஷ் மற்றும் தம்பி ராமையா ஆகியோரும் நடித்திருந்தனர். ஜீ. வீ. பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ராசாமதி இத்திரைபடத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இத்திரைப்பட தயாரிப்பு 2015 இன் பிற்பகுதியில் தொடங்கப்பட்டு 2017 மார்ச் மாதம் மூன்றாம் திகதி திரையிடப்பட்டது.[1] நடிகர்கள்
தயாரிப்பு2015 இன் ஆரம்பத்தில் சாந்தணு பாக்கியராஜ் அதிரூபன் இயக்கும் இத்திரைப்படத்திற்கு கையெழுத்திட்டார். அதிரூபன் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படம் தன் வாழ்நாளை உயிர்பிக்கவந்த திரைப்படம் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்[2] . வெற்றிமாறன் இத்திரைப்படத்தை இயக்குவதற்கு ஊக்கமளித்ததுடன் சாந்தணுவை கதாநாயகனாகவும் தெரிவு செய்திருந்தார் [3] . காரணம் சாந்தணு இயல்பாகவே நடிக்ககூடியவர் என்பதாலும் நன்றாக நடனமாடக்கூடியவர் என்பதாலும் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத் திரைப்படத்திற்கான திரைக்கதையை ஏழு வருடங்கள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படமானது பல தோல்விப்படங்களின் பின் சாந்தணுவிற்கு சிறந்தபடமாக அமைந்துள்ளது. பின்னூட்டல்கள்
|
Portal di Ensiklopedia Dunia