முரசு. நெடுமாறன்முரசு. நெடுமாறன் (பிறப்பு: சனவரி 14 1937) மலேசியாவிலுள்ள தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரும், பல்கலைக் கழக பகுதிநேர விரிவுரையாளருமாவார். தமிழ் நெறி மன்றத்தின் நிறுவுநராகவும் உள்ளார். எழுத்துத் துறை ஈடுபாடு1950 தொடக்கம் முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். இவர் கவிதைகள், குழந்தைக் கவிதைகள் போன்றவற்றையே அதிகம் எழுதி வருகின்றார். இவை இரண்டும் பற்றிய ஆராய்ச்சி எனும் கருப்பொருள்களிலேயே இவரது பெரும்பாலான எழுத்துப் படைப்புகள் காணப்படுகினறன. இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. இவர் பெருமுயற்சியுடன் மலேசியத் தமிழ்க் கவிதைகளைத் திரட்டி ஓர் ஆய்வுக் கட்டுரையுடனும் விளக்கக் குறிப்புகளுடனும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலாகப் பதிப்பித்துள்ளார். நூல்கள்
பணிகள்வகுப்பறைகள், மேடைகள் மட்டுமல்லாது வானொலியில் கல்வி ஒலிபரப்பில் இவரது பாடல்கள் பரவலாக இடம் பெற்றுள்ளன. இவற்றை ஒலிப்பேழைகளில் பதிவு செய்தும் பரப்பி வருகிறார். இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பல ஆண்டுகளாக இலவசமாகத் தமிழ்ப் பாடம் போதித்து வந்துள்ளார். ஆண்டுதோறும் மாணவர்களைக் கொண்டு மாணவர் பண்பாட்டு விழாக்கள் நடத்தியுள்ளார். கல்விசார் விருதுகள்
பிற விருதுகள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia