முருகா (திரைப்படம்)
முருகா(muruga) 2007 ஆம் ஆண்டு ஆர்.டி.நேசன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் அசோக், சுருதி சர்மா, சமிக்சா நடிப்பில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். இயக்குநர் ஆர்.டி.நேசன், உதயசங்கர், வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இராம் செந்திலின் காக்டெய்ல் டிரீம் புரொடக்சன்சு இப்படத்தை விநியோகம் செய்தனர். கதைச்சுருக்கம்முருகன் (அசோக்) தன் பள்ளித்தோழி அமுதா (ஸ்ருதி சர்மா) என்ற பணக்காரப் பெண்ணைக் காதலிக்கிறான். அவள் முருகனைக் காதலிக்கவில்லை. இது அமுதாவின் குடும்பத்திற்குத் தெரியவர அமுதாவின் மாமா செல்வம் (ரியாஸ் கான்) முருகனைக் கொல்ல முயற்சி செய்து அந்த ஊரைவிட்டு முருகனையும் அவன் தாயையும் துரத்துகின்றான். இதனால் சென்னைக்குச் செல்லும் முருகன் அங்கே ஒரு வேலையில் சேர்கிறான். அவன் வேலையின் நிமித்தம் அங்குள்ள மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும்போது அங்கு படிக்கும் அமுதாவை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இருவரும் கடந்தகால பிரச்சினையை மறந்து நண்பர்களாகி பின் காதலிக்கத் தொடங்குகின்றனர். படிப்பு முடிந்து ஊருக்குச் செல்லும் அமுதாவுக்கு அவள் மாமா செல்வத்தைத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளது தெரியவருகிறது. இறுதியாக அமுதாவின் தந்தை உதவியுடன் முருகனும் அமுதாவும் திருமணம் செய்கின்றனர். நடிகர்கள்
வரவேற்புஅசோக் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம். இயக்குநர் ஆர்.டி.நேசன் இயக்கிய முதல் திரைப்படம்[1] கதாநாயகி ஸ்ருதி சர்மாவிற்கு முதல் படம்[2] இசைபடத்தின் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா ஆவார். படத்தின் பாடல்கள் 2006 ஆம் ஆண்டு வெளியானது.[3] படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். பாடல்கள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia