எம். குமரேசன் அல்லது முருகையன் குமரேசன் (பிறப்பு: 13 சனவரி 1967); (மலாய்: M. Kumaresan; ஆங்கிலம்: M. Kumaresan; Murugayan Kumaresan) என்பவர் மலேசியாவின் தடகள சைக்கிள் ஓட்ட வீரர். 1988-ஆம் ஆண்டு மற்றும் 1992-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர்.[1]
எம். குமரேசன் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளின் சைக்கிளோட்டத்தில் ஒரு ஜாம்பவான் என்று புகழப் பட்டவர். 1985-ஆம் ஆண்டு முதல் 1997-ஆம் ஆண்டு வரை, தடகளம் மற்றும் திறந்த சாலை சைக்கிள் ஓட்டும் போட்டிகளில் 9 தங்கம்; 12 வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றவர்.[1]
மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது
இவர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இரண்டு முறை தகுதி பெற்றவர். அத்துடன் 1992-ஆம் ஆண்டு, பார்சிலோனா ஒலிம்பிக் சைக்கிளோட்ட இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் மலேசியர் என்ற பெருமையையும் பெறுகிறார்.[2]