முள்ளந்தண்டு வடம் பாதிப்புறல்
முள்ளந்தண்டு வடம் பாதிப்புறல் என்பது நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக முள்ளந்தண்டு வடத்தின் செயற்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் பாதிப்பு ஆகும். இந்த மாற்றங்கள் காரணமாக தசைத் தொழிற்பாடு, புலனுணர்வுத் தொகுதி பாதிக்கப்படல், மற்றும் தன்னியக்க நரம்புத் தொகுதிகளின் பாதிப்புகள் காரணமாக உடலின் குறித்த பகுதிகள் செயலிழக்கும். இப்பாதிப்பு முள்ளந்தண்டுவடத்தின் எப்பகுதியிலும் நிகழலாம். இது முழுமையான செயலிழப்பு அல்லது பகுதிச் செயலிழப்புக்கு இட்டுச் செல்லலாம். பகுதிச் செயலிழப்பு என்பது குறித்த சில நரம்புகள் மட்டும் மூள்ளந்தண்டு வடத்தில் செயற்படுபதாகக் காணப்படுவதாகும். பாதிப்பின் இடத்திற்கும் தன்மைக்கு ஏற்ப அதன் அளவு சிறு வலி அல்லது உணர்வின்மை முதல் பாரிசவாதம் முதல் சிறுநீர் காட்டுபாடின்மை வரை பரந்ததாக இருக்கலாம். பாதிப்புகள் கூட மிக அரிதாக குணப்படுத்தக் கூடியதாக இருப்பதுடன் நிரந்தர இழப்புகளான சதுரங்கவாதம் எனும் கழுத்துப் பாதிப்பு மற்றும் கீழ்ப்பாதி வாதம் வரை செல்லும். தசைப் பிடிப்பு, தொற்று, சுவாசப் பாதிப்பு மற்றும் கண்டிப்புக் காயம் என்பன இதன் பின்னிலைச் சிக்கல்களாகக் காணப்படும். வகைப்படுத்தல்முள்ளந்தண்டு வடம் பாதிப்புறல் நீண்ட நாள் பாதிப்புடையதாக அல்லது குறுகிய பாதிப்பு உடையதாக எனவோ, மற்றும் அதன் பாதிப்புக் காரணத்தின் அடிப்படையிலோ வகைப்படுத்தப்படும்: பொறிமுறை விசை, நஞ்சாக்கம், மற்றும் குருதி பாய்தல் குறைவு என் அமையும்.[1] இதன் பாதிப்புகள் முதன்மையான பாதிப்பு, இரண்டாம் நிலைப் பாதிப்பு எனவும் வகைப்படுத்தப்படும்: நேரடிப் பாதிப்பு காரணமாக உடனடியான இழையங்கள் சிதைவுறுவது மற்றும் உடனடிப் பாதிப்பின் விளைவாக ஏற்படும் உயிர் வேதியியல் தாக்கங்களின் மூலம் அடுத்து இழையங்கள் சிதைவடைதல் [2] முழுமையான மற்றும் பகுதிப் பாதிப்புகள்
முழுமையான முள்ளந்தண்டுப் பாதிப்பின் போது பாதிக்கப்பட்ட இடத்திற்கு கீழே சகல செயற்பாடுகளும் இழக்கப்படும் நிலை.[4] பகுதி முள்ளந்தண்டு பாதிப்பில் பாதிக்கப்பட்ட இடத்திற்குக் கீழே உணர்ச்சி மற்றும் இயக்கம் காணப்படும்.[5] பகுதிப் பாதிப்பு என வகைப்படுத்தப்பட்டால் உணர்ச்சி மற்றும் இயக்கத்திற்கான இருப்பளவு S4 to S5 எனக் குறிப்பிடப்படும்,[6] குறித்த பகுதிக்கான நரம்புகள் முள்ளந்தண்டு வடத்தின் தாழ் பகுதிகளுடன் தொடர்புறுவதனால் அப்பகுதிகளுக்கான தொழிற்பாடுகளும் உணர்ச்சியும் குறைவுபடும் போது அது பகுதியளவு பாதிக்கப்பட்டதாக கொள்ளப்படும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia