முஹம்மது ஜாவேத்முஹம்மது ஜாவேத் (Mohammad Jawed -17 June 1963) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை). 2019 இந்தியப் பொதுத் தேர்தல் மற்றும் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக பீகாரின், கிசன்கஞ்சு மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கல்விமுஹம்மது ஜாவேத் புது டெல்லியில் உள்ள விமானப்படை பள்ளியில் (TAFS) தனது பத்தாம் வகுப்பை (1979) மற்றும் இடைநிலைப் படிப்பை (1981)ஆண்டில் படித்தார்.[1] இவர் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரியில், 1989 ஆண்டில் எம்பிபிஎஸ் படித்துள்ளார்..[2][3] தனிப்பட்ட வாழ்க்கைமுகமது ஜாவேத் யுமன் ஹுசைனை மணந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அரசியல் வாழ்க்கை1989 ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்தார். 2000 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக அவர் கிஷன்கஞ்ச் விதான் சபா தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் 2005 ஆம் ஆண்டு தாக்கூர்கஞ்ச் விதான் சபா தொகுதியிலிருந்தும், 2010 & 2015 ஆகிய தேர்தல்களில் கிஷன்கஞ்ச் விதான் சபா தொகுதியிலிருந்தும் பீகார் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து 2019 பொதுத் தேர்தலில் [[ கிசன்கஞ்சு மக்களவைத் தொகுதியில்காங்கிரஸ் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்டார். பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வென்ற ஒரே எம்.பி.யானார்.[5],[6][7] 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக பீகாரின், கிசன்கஞ்சு மக்களவைத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளத்தின் முஜாஹித் ஆலமை 59,692 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக உள்ளார். இது தவிர, எம்எல்ஏவாக இருந்த காலத்தில் சட்டம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகவும், தலைமைக் கொறடாவாகவும் பணியாற்றினார். இவர் பீகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் செயல் தலைவரும் ஆவார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia