மூடகம் (நிலவியல்)![]() மூடகம் (mantle) என்பது புவி போன்ற வானியற் பொருட்களின் ஒரு பகுதியாகும். இது பொதுவாக அப்பொருட்களின் மையப் பகுதியைச் சுற்றி அவற்றின் மேல் ஓட்டுக்குக் கீழே அமைந்திருக்கும். புவியின் மூடகம் ஏறத்தாழ 2,900 கி.மீ. தடிப்புள்ள பாறைகளாலான ஓடு ஆகும். இது பூமியின் கனவளவில் 70% ஐ உள்ளடக்குகின்றது. இது பெரும்பாலும் திண்மமானது, புவியின் இரும்புச் சேர்வைகளை அதிகம் கொண்ட மையப் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. இம் மூடகத்தின் குறைந்த ஆழத்தில் நடைபெற்ற உருகல் மற்றும் எரிமலைச் செயற்பாடுகளினால் புவி மேற்பரப்போடு ஒட்டி, உருகியநிலையில் இருந்து பளிங்காக்கம் அடைந்த பொருட்கள் புவியோட்டை உருவாக்கியுள்ளன. இது ஒப்பீட்டளவில் மிகவும் மெல்லிய ஓடாகும். புவியின் மூடகம் உருகியபோது உருவான வளிமங்கள் (வாயுக்கள்), புவியின் வளிமண்டலத்தின் சேர்மானம், அதன் அளவு என்பவற்றில் பாரிய தாக்கத்தைக் கொண்டிருந்தன. அமைப்புமூடகம் அதன் வேதியியல் தன்மையை ஒட்டிப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு:
|
Portal di Ensiklopedia Dunia