மூன்றாம் துகோஜிராவ் ஓல்கர்
மூன்றாம் துகோஜிராவ் ஓல்கர் (Tukojirao III Holkar) (1890 நவம்பர் 26 - 1978 மே 21) இவர் மராட்டியர்களின் ஓல்கர் வம்சத்தைச் சேர்ந்த இந்தூர் இராச்சியத்தின் மகாராஜா சிவாஜிராவ் ஓல்கரின் மகனும் வாரிசுமாவார். இவருக்கு ஆதரவாக இவரது தந்தை 1903 சனவரி 31 அன்று பதவி விலகினார். இவரது தாயார் சீதா பாய் என்பவராவார். இந்தூரின் தேலி கல்லூரி [1][2] [3] [4]மற்றும் தேராதூனிலும் கல்வியை முடித்தார். ஆட்சிஇவர் ஆரம்பத்தில் ஒரு ஆட்சிமன்றக் குழுவின் கீழ் ஆட்சி செய்தார். 1911 நவம்பர் 6 ஆம் தேதி தனது 21 வயதில் அனைத்து அதிகாரங்களுடனும் பதவியேற்றார். அதே ஆண்டு இவர் இலண்டனில் நடந்த இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டார். 1918 புத்தாண்டு கௌரவங்களில் இவர் இந்திய நட்சத்திரங்களின் ஒழுங்கு என கௌரவிக்கப்பட்டார். இவர் தனது ஒரே மகன் இரண்டாம் யஷ்வந்த்ராவ் ஓல்கருக்கு ஆதரவாக 1926 பிப்ரவரி 26 அன்று பதவி விலகினார். குடும்பம்1895 ஆம் ஆண்டில் இவர் சந்திரவதி பாய் என்பவரை மணந்தார். பின்னர், 1913 இல் இவர் இந்திரா பாய் மற்றும் 1928 ஆம் ஆண்டில் சர்மித்தா தேவி ஆகியோரை மணந்தார். நான்சி அன்னே மில்லர் என்ற அமெரிக்காவில் பிறந்த இவரது மூன்றாவது மனைவி சர்மித்தா தேவி திருமணத்திற்கு முன்பு, இந்து மதத்தை ஏற்றுக்கொண்டார். துகோஜிராவை சுற்றியுள்ளவர்கள் இந்த திருமணத்தை நடத்துவதற்கு எதிராக இருப்பதால், இந்த விசயத்தில் தலையிட ஆதி சங்கராச்சாரியரை துகோஜிராவின் தனி மருத்துவர் சீனிவாச கோசாவி, கேட்டுக் கொண்டார். ஆதி சங்கராச்சாரியரே விழாவை நிகழ்த்தினார். மேலும் திருமணமும் நடந்தது. மருத்துவர் கோசாவிக்கு பல மரண அச்சுறுத்தல்கள் வந்தன. அவர் விழா நடைபெறும் வரை சிறிது காலம் மறைந்து வாழ்ந்தார். இறப்புதுகோஜிராவ் பாரிஸில் 1978 மே 21 இல் இறந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஆறு மகள்கள் இருந்தனர். மேலும் காண்க* இந்தூர் இராச்சியம்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia