மூளை தண்டுவட திரவம்![]() மூளையின் வெண்ட்ரிகிள்கள், உப சிலந்தி வலையுருப் பிரதேசம் மற்றும் தண்டுவட மையக் குழியினுள்ளும் நிரம்பியுள்ள நிறமற்ற, தெளிவான திரவம் மூளைத் தண்டுவடத் திரவம் (Cerebro-spinal fluid) அல்லது மூளைய முண்ணாண் பாய்பொருள் ஆகும். மூளையின் வெண்ட்ரிகிள்களில் (மூளைய அறைகள்) உள்ள தோலுருப் பின்னல் (choroid plexus) சுரப்புக் கலங்களான எப்பண்டைமல் கலங்களால் மூளைத் தண்டுவடத் திரவத்தைச் சுரக்கப்படுகின்றது. சராசரியாக,ஒரு மனிதனில் உள்ள இத்திரவத்தின் அளவு 150 மில்லி லிட்டர். ஒரு நாளில்,550 மில்லி லிட்டர்த் திரவம் சுரக்கப்படுகிறது.இத்திரவத்தின் பணிகளானவை: தலை அசையும் பொழுது, அல்லது மத்திய நரம்பு மண்டலம் அதிர்ச்சிக்குள்ளாகும் போது இத்திரவம் அதிர்வு தாங்கியாகச் செயல்படுகிறது. மத்திய நரம்பு மண்டலத்தின் பாதுகாப்பு உறையாகவும், மூளையின் மிதவை இயல்பையும் சரிசெய்கிறது. மூளை மற்றும் தண்டுவடத்திற்கு தேவையான ஹார்மோன்களையும்,உணவுப் பொருட்களையும் இது சேமித்து வைக்கிறது.இது இயக்கத் தாங்கி (Mechanical Buffer) ஆக இயங்குகிறது. மத்திய நரம்பு மண்டலத்தின் உள்ளும் புறமும் அமைந்து இயக்க அழுத்தத்தைச் சரி செய்கிறது. மண்டையோட்டுக் குழியின் உள்ளழுத்தம் இத்திரவத்தை வெளியேற்றுகிறது. இவ்வழுத்தம் குறையும் போது இத்திரவம் வெளிச்செல்வது நிறுத்திக் கொள்ளப்படுகிறது. உற்பத்தியும் கூறுகளும்மைய நரம்புத் தொகுதிக்குள் நிணநீர்த் தொகுதி இருப்பதில்லை. அத்தொகுதியின் பாய்பொருளான நிணநீரைப் போன்ற தொழிலையும் கட்டமைப்பையும் மூளைய முண்ணான் பாய்பொருள் கொண்டுள்ளது. அது குருதிக்கும் மூளைக்கலங்களுக்கும் இடையில் போசணைக் கூறுகளுக்கும், ஒக்சிசனுக்கும், நீருக்கும் ஒரு கடத்தும் பாதையாகவும் உள்ளது. இது குருதி முதலுருவிலிருந்து உருவாக்கப்படுகின்றது. இது தொடர்ச்சியாகச் சுரக்கப்பட்டும் மீளுறிஞ்சப்பட்டும் உள்ளதால் எப்போதும் புத்துருவத்துடன் பேணப்படுகின்றது. எனினும் மூளைய முண்ணான் பாய்பொருளில் புரத உள்ளடக்கம் பெருமளவு குறைவாகும். உடல் உள்ள நிலைக்கேற்ப இதன் அமுக்கம் மாறுபடும். படுத்திருக்கும் போது 8-15 mmHg அமுக்கமும், நிமிர்ந்து இருக்கும் போது 16-24 mmHg அமுக்கமாகவும் இருக்கும்.
தொழில்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia