மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், தமிழ்நாட்டின் ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கான இத்திட்டம் மூவலூர் இராமாமிர்தம் நினைவாக, தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியால் 1989ல் ரூ.5,000 திருமண நிதியுதவியாக துவக்கப்பட்ட இந்த திட்டத்தில், 2009இல் ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. பின்னர் 2011இல் இத்திட்டத்தவகையை 50,00 ஆக உயர்த்தியும் தாலிக்கு 4 கிராம் தங்கமும் சேர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டது. 2016இல் 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண்ணிற்கு மட்டும் திருமண உதவி தொகை வழங்கப்படும். பெண்ணின் வயது 18 முடிந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 24,000 மிகாமல் இருக்க வேண்டும். [1]. உதவித்தொகைக்கான விண்ணப்பத்துடன் பெண்ணின் திருமண அழைப்பிதழ், ஆண்டு வருமான சான்றிதழ், பள்ளி அல்லது கல்லூரி அல்லது பாலிடெக்னிக் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் நகல் ஆகியவைகளை இணைத்து, திருமணத்திற்கு 45 நாட்களுக்கு முன்னர் திருமண உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை தங்கள் வாழும் பகுதியின் மாநகராட்சி ஆணையர் அல்லது நகராட்சி ஆணையர் அல்லது ஊராட்சி ஒன்றிய ஆணையர் அல்லது மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும். திருமண உதவித் தொகையும், தகுதிகளும்
திட்டம் மாற்றியமைப்பு2022 ஆண்டு மு. க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இத்திட்டத்தை பெண் கல்வியை ஊக்குவிக்கும்படியாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றியமைத்தது. இப்புதிய திட்டத்தின்படி 6 முதல் 12ஆம் வகுப்புவரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. இத்திட்டத்தில் மாணவிகளின் வங்கிக்கணக்கில் மாதம்தோறும் வரவு வைக்கப்படும். மேலும் இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia