மெகசானா மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம்
மெகசானா மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் அல்லது தூத்சாகர் கூட்டுறவு பால் பண்ணை' (Mehsana District Cooperative Milk Producers' Union), இந்தியாவின், குஜராத் மாநிலத்தில், மெகசானா நகரத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தை தூத் சாகர் என்று பெருமையாக அழைப்பர். தூத்சாகர் (பாற்கடல்) என்றியப்படும் மெகசனா மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், நாள் ஒன்றுக்கு 1.41 மில்லியன் கிலோ கிராம் பாலை பதப்படுத்துகிறது. 1150 கிராமங்களில் உள்ள 45 இலட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலைக் கொள்முதல் செய்வதற்கு தேவையான கட்டமைப்பு கொண்டுள்ளது. பாலிருந்து கிடைக்கும் பால் பொருட்களான வெண்ணெய், நெய், தயிர் மற்றும் பால் பவுடர்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் கொண்டுள்ளது. அதிக பால் தரும் மெகசானி எனும் உள்ளூர் எருமைகள் உற்பத்திக்கு மெகசனா புகழ் பெற்றது. இக்கூட்டுறவு பால் பண்ணை ISO 9001:2000, ISO 14000:2004, மற்றும் ISO 22000:2005 தரச் சான்றிதழ் பெற்றுள்ளது. வரலாறுஅமுல் மாதிரி கூட்டுறவு நிறுவனமாக தூத்சாகர் 8 நவம்பர் 1960இல் பதிவு செய்யப்பட்டு, 1963முதல் செயல்படத் துவங்கியது. இது குஜராத் மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் ஒரு உறுப்பினர் ஆகும். இது ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கூட்டுறவு பால் பண்ணை தொழிற்சாலை ஆகும். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia