மெட்டா சின்னபார்
மெட்டா சின்னபார் (Metacinnabar) என்பது HgS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனசதுரப் படிகவடிவத்திலுள்ள பாதரச சல்பைடு ஆகும். உயர் வெப்பநிலை வடிவம், சின்னபார் (முக்கோண அமைப்பு), உயர் வெப்பநிலை மிகைசின்னபார் (அறுகோண அமைப்பு) என முப்படிக அமைப்பில் காணப்படுகிறது. பாதரச படிவுகளில் சின்னபார் கனிமத்துடன் பாதரசம், ஊர்ட்சைட்டு, சிடிப்னைட்டு, மார்கசைட்டு, இரியல்கர், கால்சைட்டு, பாரைட்டு, சால்கோடோனி மற்றும் ஐதரோகார்பன்களுடன் சேர்ந்து காணப்படுகிறது.[1] மெட்டா சின்னபார் முதன்முதலில் 1870 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பப்லோ விரிகுடாவிற்கு வடக்கே அமைந்துள்ள நாபா மாகாணத்தின் உள்ளூர் நகராட்சி ஆணையத்தால் ஆளப்படாத ஒரு பிராந்தியமான நாக்சுவில்லியில் உள்ள ரெடிங்டன் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[2][3] பன்னாட்டு கனிமவியல் சங்கம் மெட்டா சின்னபார் கனிமத்தை Mcin[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia