மெட்ரோஜெட் விமானம் 9268
மெட்ரோஜெட் விமானம் 9268 (Metrojet Flight 9268) என்பது எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்க் நோக்கி சென்றுகொண்டிருக்கையில், அக்டோபர் 31, 2015 அன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கிய ரஷ்யா நாட்டு வானூர்தி ஆகும். விமானத்தில் பயணம் செய்த 24 குழந்தைகள் உள்ளிட்ட 217 பயணிகளும், 7 பணியாளர்களும் உயிரிழந்தனர். விமானம் வீழ்ந்து நொறுங்கிய விவரம்![]() சார்ம் எல்-சேக் வானூர்தி நிலையத்திலிருந்து உருசியாவின் புல்கொவொ வானூர்தி நிலையத்திற்கு, 06:51 மணியளவில் 9268 எனும் எண்ணைக் கொண்ட வானூர்தி கிளம்பியது. கிளம்பிய 23 நிமிடங்கள் கழித்து, சைப்ரசு விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பினை வானூர்தி இழந்தது.[3] பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்வானூர்தி விவரங்கள்ஏர்பஸ் A321 - 231 வகையைச் சேர்ந்த இந்த வானூர்தி, 18 ஆண்டுகள் வயதுடையது[4]. IAE V2533 எனும் பெயருடைய எஞ்சின்கள் இரண்டின் மூலமாக இயங்கிய இந்த வானூர்தி, 220 பயணிகளை ஏற்றிச் செல்லத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். 56,000 பறப்பு மணித்தியாலங்களைக் கொண்டிருந்த இந்த வானூர்தி, மொத்தமாக 21,000 முறை பறந்திருந்தது[5][6]. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia