மெதிலீன் (Methylene) (முறையான பெயரிடு முறையின்படி மெதிலிடீன், மற்றும் டைஐதரிடோகார்பன்) கார்பீன் என்றும் அழைக்கப்படுகிற ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு CH 2 ( [CH 2]எனவும் எழுதப்படலாம்). இது ஒரு நிறமற்ற வாயு ஆகும். இடை-அகச்சிவப்புக் கதிர் வீச்சின் அலை நீளத்தில் ஒளிரக்கூடியதும், நீர்த்த நிலையிலோ அல்லது ஒரு சேர்க்கைப் பொருளாகவோ மட்டும் நிலைத்தன்மை உடையதுமான சேர்மம் ஆகும்.
கார்பீன் வகைச் சேர்மங்களில் மிகவும் எளியதும் முதலாவதும் மெதிலீன் ஆகும். [2]:p.7[3] இச்சேர்மமானது மிகக்குறைந்த அழுத்தத்தில் அல்லது ஒரு வேதி வினையின் ஊடாக மிகக் குறுகிய காலமே நிலைத்து நிற்கின்ற ஒரு இடைவினைப்பொருளாகவோ மட்டும் கண்டறியப்படுகிறது.[4]
மெதிலிடீன் என்பது இரண்டு ஐதரசன் அணுக்கள் நீக்கப்பட்ட மீத்தேனாக கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
↑ 1.01.1"methanediyl (CHEBI:29357)". Chemical Entities of Biological Interest. UK: European Bioinformatics Institute. 14 January 2009. IUPAC Names. Retrieved 2 January 2012.