மெத்தில்மக்னீசியம் குளோரைடு
மெத்தில்மக்னீசியம் குளோரைடு (Methylmagnesium chloride) என்பது CH3MgCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம உலோக சேர்மமாகும். மெத்தில்மக்னீசியம் குளோரைடு எளிதில் தீப்பற்றக்கூடிய ஒரு சேர்மம் ஆகும். நிறமற்ற இச்சேர்மம் காற்றிலுள்ள ஈரப்பத்த்தினையும் உணர்ந்து செயலாற்றும் தன்மை கொண்டது. எளிய கிரிக்னார்டு வினைப்பொருளுக்கு மெத்தில்மக்னீசியம் குளோரைடு ஒரு உதாரணமாகும். வணிகரிதியாகவும் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. பொதுவாக டெட்ரா ஐதரோபியூரானில் ஒரு கரைசலாக சேமிக்கப்படுகிறது. தயாரிப்புமெத்தில்மக்னீசியம் புரோமைடு [1], மெத்தில்மக்னீசியம் அயோடைடு, மெத்தில்மக்னீசியம் குளோரைடு போன்ற பொதுவாகக் காணப்படும் சேர்மங்கள் குறைவான சமான எடையும், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டும் உருவாகின்றன. மெத்தில் குளோரைடுடன் எத்தில் ஈதரில் உள்ள மக்னீசியம் வினைபுரிந்து மெத்தில்மக்னீசியம் குளோரைடு உருவாகிறது [2]. பிற கிரிக்னார்டு வினைப்பொருள்களைப் போல மெத்தில்மக்னீசியம் குளோரைடு ஈதர் கரைப்பான்களால் அதிகமாக கரைப்பானேற்றம் செய்யப்படுகிறது. இதற்காக இரண்டு ஆக்சிசன் அணுக்கள் ஒருங்கிணைவு வழியாக நான்முகிகளாக பிணைக்கப்பட்ட மக்னீசியம் மையங்கள் தோன்றுகின்றன. ![]() மெத்தில்லித்தியம் போல இதுவும் ஒரு செயற்கை மெத்தில் கார்பேனியன் சிந்தோனுக்கு சமமானதாகும். தண்ணீர் மற்றும் பிற புரோட்டானுடைய வினைப்பொருட்களுடன் இது வினைபுரிந்து மீத்தேனைக் கொடுக்கின்றன.
டையாக்சேனுடன் சேர்த்து சூடுபடுத்தும்போது மெத்தில்மக்னீசியம் குளோரைடு சிகூலெங்கு சமநிலை வழியாக டைமெத்தில்மக்னீசியமாக மாற்றமடைகிறது.
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
|
Portal di Ensiklopedia Dunia