மெய்ஞ்ஞானப் புலம்பல்

மெய்ஞ்ஞானப் புலம்பல் என்பது பத்திரகிரியார் என்ற சித்தரால் பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டில் பாடப்பெற்ற பாடல்கள் ஆகும். இந்த நூல் கடவுள் வாழ்த்துக் கண்ணி நீங்களாக 231 கண்ணிகளைக் கொண்டது. இந்தக் கண்ணிகள் ஊடாகப் பல மெய்யியல் கருத்துகள் கூறப்படுகின்றன.

பாடல் எடுத்துக்காட்டுகள்

  மனதைஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
  என தறிவைஅம்பாக்கி எய்வது இனி எக்காலம் ? 161

  வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
  ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம் ? 032

  அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்
  பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம் ? 192

  பிறப்பும் இறப்பும்அற்றுப் பேச்சும்அற்று மூச்சும்அற்று
  மறப்பும் நினைப்பும்அற்று மாண்டிருப்பது எக்காலம் ? 206

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya