மெய்நிகர் நகர்பேசி பிணைய சேவையாளர்மெய்நிகர் நகர்பேசி பிணைய சேவையாளர் (mobile virtual network operator, MVNO) அல்லது (ஐக்கிய இராச்சியத்தில்) நகர்பேசி பிற உரிமைபெற்ற சேவையாளர் (mobile other licensed operator, MOLO) என்றவகை தொலைதொடர்பு சேவையாளர்கள் தாங்கள் வழங்கும் சேவைகளுக்கான நகர்பேசி பிணையத்தின் அலைக்கற்றைக்கான உரிமத்திற்கும் கம்பியில்லாப் பிணைய கட்டமைப்பிற்கும் உரிமை இல்லாதவர்களாகும். இத்தகைய சேவையாளர்கள் ஓர் நகர்பேசி பிணைய உரிமையாளருடன் வணிக உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு பிணையச் சேவைகளுக்கான திரள் அணுக்கத்தை மொத்தவிற்பனை விலையில் பெறுகின்றனர்; பிறகு சில்லறைவிலையில் தங்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கி வணிகம் புரிகின்றனர். தங்களுக்கான சேவை மையத்தையும் கட்டணமிடும் கட்டமைப்புகளையும் மற்ற சந்தைப்படுத்தல் கட்டமைப்புகளையும் சொந்தமாகக் கொண்டிருக்கலாம் அல்லது அவற்றையும் மெய்நிகர் நகர்பேசி பிணைய ஏற்படுத்துனர் ஒருவரின் சேவைகளை நாடலாம் (Mobile Virtual Network Enabler, MVNE). உலகளவில் மெயநிகர் நகர்பேசி பிணைய சேவையாளர்கள்அக்டோபர் 2012 நிலவரப்படி உலகளவில் 633 மெய்நிகர் நகர்பேசி பிணைய சேவையாளர்கள் செயலாக்கத்தில் உள்ளனர்.[1] மெய்நிகர் நகர்பேசி பிணைய சேவையாளர்கள் தனிநபர்களைத் தவிர நிறுவனங்களுக்கான சேவைகளுக்கும் போட்டியிடுகின்றனர். வாடிக்கையாளர் சேவைகளில் குவியப்படுத்தி விற்பனைவிலையைத் தங்கள் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளனர்.[2] வழமையான நகர்பேசி சேவைகளைத் தவிர 120 சேவையாளர்கள் அகலப்பட்டை சேவைகளையும் வழங்கி வருகின்றன. [3] சான்றுகோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia