மெலித்திக் நீரிலி(Mellitic anhydride) என்பது C12O9. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். மெலித்திக்கமிலத்தின் நீரற்ற வடிவமே மெலித்திக் நீரிலி என்று அழைக்கப்படுகிறது.
கார்பனீராக்சைடு , கார்பன் ஓராக்சைடு, கார்பன் கீழாக்சைடு முதலியன போல இதுவும் ஒரு கார்பனின் ஆக்சைடு அதாவது ஆக்சோ கார்பன் சேர்மம் ஆகும். இந்நீரிலி வெண்மை நிறமாகவும், பதங்கமாகும் தன்மையும் கொண்டுள்ளது. 1830 ஆம் ஆண்டில் இலைபிக் மற்றும் பிரெடரிக் வோலர் ஆகிய இருவரும் மெலிதிக் கனிம ஆய்வின்போது வெளித்தோற்றத்தில் மெலிதிக் நீரிலையைக் கண்டறிந்தனர். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு C4O3 என்றும் குறிப்பிட்டனர்[2][3][4]. 1913 ஆம் ஆண்டில் இச்சேர்மத்தை எச். மேயர் மற்றும் கே. சிடெய்னர் ஆகியோர் சரியான முறையில் வரையறை செய்தனர்[5][6]. அதன் பின்னர் இச்சேர்மம் அதனுடைய பென்சீன் வடிவத்தைத் தக்கவைத்துக் கொண்டது.[7][8]
↑Fowler, P. W.; Lillington, M. (2007). "Mellitic Trianhydride, C12O9: The Aromatic Oxide of Carbon". Journal of Chemical Information and Modeling47 (3): 905–908. doi:10.1021/ci600547n.